விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி போக்குவரத்து காவல் துறை சார்பில் பைபாஸ் சாலைகளில் ரிப்ளக்டர் ஸ்டிக்கர் பிரதிபலிப்பான் ஒட்டும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பைபாஸ் சாலையில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டர்களில் உள்ள சிகப்பு நிற பிரதிபலிப்பான்கள் தண்ணீரில் நனைந்து சரியாக பிரதிபலிக்கவில்லை.இதனால் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு விபத்து ஏற்படும் வாய்ப்பிருந்தது. மழை நேரங்களில் சாலையில் பயணிக்கும் போது விபத்து எச்சரிக்கை அறிவிப்பிற்காக புதிய பிரதிபலிப்பான்கள் ஒட்ட முடிவு செய்தனர்.இதையடுத்து நேற்று விக்கிரவாண்டி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், ராமச்சந்திரன் மற்றும் போலீசார் விக்கிரவாண்டி போலீஸ் நிலைய எல்லை பகுதிகளில் பைபாஸ் சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகளில் புதிய சிகப்பு நிற பிரதிபலிப்பான் ஸ்டிக்கரை ஒட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.