பெண் டாக்டர் கொலை:குற்றவாளிகளை விசாரிக்க போலீஸ் மனு | Telangana Court to Hear Cops' Petition Seeking 10-day Custody of 4 Accused for Raping & Murdering Vet | Dinamalar

பெண் டாக்டர் கொலை:குற்றவாளிகளை விசாரிக்க போலீஸ் மனு

Updated : டிச 03, 2019 | Added : டிச 03, 2019 | கருத்துகள் (20)
Share
பெண் டாக்டர் கொலை, குற்றவாளிகள், காவல்  போலீஸ் மனு

இந்த செய்தியை கேட்க

ஐதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஐதராபாதில் சர்வதேச விமான நிலையத்திற்கு மிக அருகில் பெண் டாக்டரை நான்கு பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததுடன் எரித்து கொலை செய்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பார்லி.யில் பெண் எம்.பி.க்களின் ஆவேச பேச்சால் பார்லிமென்டே கிடுகிடுத்தது.


latest tamil news


நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு குற்றவாளிகளும் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை 10 நாள் தங்களது காவலில் எடுத்து விசரிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் சைபராபாத் போலீசார் மனு செய்துள்ளனர். இதன் மீதான விசாரணை விரைவில் நடக்கிறது.

முன்னதாக குற்றவாளிகள் சார்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக ரெங்கா ரெட்டி, மெகபூபா நகர் ,ஷாத்நகர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தினர் குற்றவாளிகள் சார்பில் ஆஜராக மாட்டோம் என முடிவு செய்துள்ளனர்.


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X