லிம்கா பேரை சொல்லி வாரிச்சுருட்டு... லீலை செய்து மாட்டிய ஏட்டு!| Dinamalar

'லிம்கா' பேரை சொல்லி வாரிச்சுருட்டு... 'லீலை' செய்து மாட்டிய ஏட்டு!

Added : டிச 03, 2019 | |
த்ரா வீட்டுக்கு வந்த சித்ரா, கிளம்ப ஆயத்தமானபோது, மழை பெய்ய ஆரம்பித்தது.''இருங்க, மழை வேற பக்கம் 'டிரான்ஸ்பர்' ஆகட்டும். அப்புறம் கிளம்பி போங்க,'' என்று கூறியவாறே, மித்ரா, மீண்டும் சூடாக டீ கொண்டு வந்தாள்.அதை வாங்கி பருகியவாறே, ''டிரான்ஸ்பர் லிஸ்ட் போட்டத்தில், கணிசமாக காச பார்த்துட்டாங்களாம்டி,''''என்னக்கா சொல்றீங்க... 'டிரான்ஸ்பர்' செஞ்சாலும் பணம்
 'லிம்கா' பேரை சொல்லி வாரிச்சுருட்டு... 'லீலை' செய்து மாட்டிய ஏட்டு!

த்ரா வீட்டுக்கு வந்த சித்ரா, கிளம்ப ஆயத்தமானபோது, மழை பெய்ய ஆரம்பித்தது.''இருங்க, மழை வேற பக்கம் 'டிரான்ஸ்பர்' ஆகட்டும். அப்புறம் கிளம்பி போங்க,'' என்று கூறியவாறே, மித்ரா, மீண்டும் சூடாக டீ கொண்டு வந்தாள்.அதை வாங்கி பருகியவாறே, ''டிரான்ஸ்பர் லிஸ்ட் போட்டத்தில், கணிசமாக காச பார்த்துட்டாங்களாம்டி,''''என்னக்கா சொல்றீங்க... 'டிரான்ஸ்பர்' செஞ்சாலும் பணம் கிடைக்குமா?'' ஆர்வகமாக கேட்டாள் மித்ரா.''ஆமாண்டி. நம்ம டிஸ்ட்டிரிக்ல அப்படித்தானே நடந்துட்டு இருக்கு. போன வாரம், டெபுடி பி.டி.ஓ., 'டிரான்ஸ்பர்'களுக்கு, 'டிரான்ஸ்பர்' போட்டாங்க''''கேட்ட இடத்துக்கு மாத்தறதுனா, பல ஆயிரக்கணக்குல 'கட் அண்ட் ரைட்'டா வசூல் பண்ணிட்டாங்க. இதையெல்லாம் கண்டுபிடிச்சு 'சுளுக்' எடுக்கற தைரியம் யாருக்கும் இல்லைங்கிற தைரியத்தில், ஒரு குரூப், தொடர்ந்து சம்பாதிக்குதாம்,''''ஏங்க்கா... இதையெல்லாம், மாவட்ட அதிகாரி கண்டுக்கிட்டு, நடவடிக்கை எடுத்தார்னா மட்டுந்தான், மத்த துறையிலும், இதுபோல் நடக்காமல் இருக்குங்க்கா...''''பார்க்கலாம், மித்து. அவரு என்ன 'ஸ்டெப்' எடுக்குறாருன்னு,'' சொன்ன சித்ரா, ''அக்ரி மீட்டிங்கில், அதிகாரி 'செம காண்டு' ஆயிட்டாராம், தெரியுமா?'' கேட்டாள் சித்ரா.''ம்..ஹூம்... தெரியலைங்க்கா...''''விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்துக்கு, நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியம்னு, தலைமை அதிகாரிங்க வர்றதே இல்லையாம். பதில் சொல்ற அலுவலர் வராம, மனு வாங்கிட்டு போறதுக்கு மட்டும் ஆள் அனுப்பிடறாங்க''''போனவாரம் நடந்த கூட்டத்துல, அதிகாரிங்க வராததால, வராத அதிகாரிகளுக்கு 'நோட்டீஸ்' அனுப்பி விளக்கம் கேளுங்கன்னு, கலெக்டர் டென்ஷனாகி 'டோஸ்' விட்டாராம்,''''கரெக்ட்தானுங்க்கா? அதிகாரிங்க... ஏனோதானோன்னு இருந்தா, மக்களுக்கு நல்லது எப்படி நடக்குங்க்கா? இதனால, பல இடங்களில், மக்கள் கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டாங்க...''''இது எங்கடி நடந்தது?''''அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால், மக்காச்சோள பயிருக்கு, இலவசமா பூச்சிக்கொல்லி மருந்து கொடுத்தாங்க. 'மருந்து அடிக்க தனியா மானியம், ஆயிரம் ரூபாய் கொடுப்போம்னு சொன்னாங்களேன்னு, வேளாண் அதிகாரிகளிடம், விவசாயிகள் கேட்டிருக்காங்க,''''அதுவரை யாருக்கும் தெரியாத விவரம், மற்ற விவசாயிகளுக்கும் தெரிஞ்சிருச்சு. ஆனா.. 500 ரூபாய்தான் கொடுத்திருக்காங்க. மீதி, 500 எங்கேன்னு, கேள்வி கேட்ட விவசாயிகளிடம், 'பண்ட்' வந்ததும் கொடுக்கறோம்னு சொல்லி சமாளிச்சாங்களாம்,'' என்றாள் மித்ரா.''இப்படி, மக்களுக்கு கொடுக்காம, காச, சுருட்ற அதிகாரிகள் என்னைக்குத்தான் திருந்துவாங்களோ?'' என்ற சித்ரா,''எம்.பி., தேர்தலில் தோத்துப்போனதால, எந்த வார்டுல நிக்கலாம்னு, ஆளுங்கட்சி தீவிரமாக ஆய்வு செஞ்சிட்டு இருக்காம்,'' என, அரசியல் மேட்டருக்கு தாவினாள்.''ஆமாங்க்கா... எலக்ஷன் முடிவு வந்தப்பறம்தான், மேயர் யாருன்னு தெரிய வரும்,'' என்றாள் மித்ரா.''அது சரிதாண்டி. ஏற்கனவே,எம்.பி., தேர்தலில் அடி வாங்கியாச்சு. இந்த வாய்ப்பும் போனா... அரசியலில் காணாமல் போயிடுவோம்னு, வார்டு செலக்ட் பண்றதுல, 'மாஜி'யும் அவரோட ஆட்களும் 'டீம்' போட்டு, அலசி ஆராய்ச்சி நடத்திட்டு இருக்காங்களாம்,''''அடுத்த அசெம்பிளி எலக்ஷனுக்கு, உள்ளாட்சி பிரதிதிகள் நிறைய பேர் இருந்தால் மட்டுமே, சமாளிக்க முடியும்னு, ஆளுங்கட்சி மேலிடம் சொன்னதால், இவங்க, இங்க 'பிளான்' போட்டு, தேர்தல் வேலை செய்றாங்களாம்,'' விளக்கினாள் சித்ரா.அப்போது அறைக்குள் வந்த மித்ராவின் அம்மா, ''ரோட்டோரம் இருக்கற 'டாஸ்மாக்' கடையை மூடறதுக்கு போராட்டம் நடக்குது. நான் போயிட்டு வர்றேன், நீங்க பேசிட்டிருங்க,'' என்று சொல்லி கிளம்பினார்.அதைக்கேட்ட மித்து, ''ஏங்க்கா... இந்த 'டாஸ்மாக்' மதுக்கடை மேட்டரில், 'சவுத்' டபுள் ஆக்ஷன்.''யெஸ்.. கரெக்ட்தான். காலேஜ் ரோட்டில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டமாக சென்று, கலெக்டர் ஆபீசில் மனு கொடுத்தனர். ஆனால், தனக்கு குறிப்பிட்ட கடைகள் வேண்டுமென, 'டாஸ்மாக்' அலுவலகத்தில், உள்ளிருப்பு போராட்டமும் நடத்தி, காரியத்தை சாதிச்சிட்டார்,''''இதிலென்ன கூத்துன்னா,மங்கலம் ரோட்டில் உள்ள ஒரு கடை, பொதுமக்களும் ரொம்ப இடைஞ்சலா இருக்குது. பக்கத்திலயே கவர்மென்ட் ஸ்கூலும் இருக்குது. ஆனால், அந்தக்கடை 'சவுத்' கண்ணுக்கு தெரியாது. ஏன்னா, அது அவரோட 'கை' நடத்துற கடையாம்,'' என்றாள் சித்ரா.டீ டம்ளர்களை கிச்சனில் வைத்து விட்டு வந்த மித்ரா, ''அக்கா... புதுசா வந்திருக்கிற அதிகாரியின் 'கஞ்சா வேட்டை' தொடருதாம்,'' என்றாள்.''அடடா.. அதில் என்ன அப்டேட் இருக்குது?''''அப்டேட் இல்லைங்க்கா, அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனையில் ஒரு கும்பல் தொடர்ந்து ஈடுபட்டு வருதாம். தகவல் கிடைச்சு, போலீசார் மூவரை அரெஸ்ட் செய்தனர்,''''ஆனால், வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறிய கதையா, மறுநாளே அதே நபர்கள், வழக்கம்போல் கஞ்சா விற்கிறாங்களாம். அதுக்குள்ள, போலீசை சரிக்கட்டி, 'மாமூல்' வாழ்க்கையை ஆரம்பிச்சிட்டாங்க்கா. அந்த அதிகாரி, மீண்டும் 'சாட்டை' சுழற்றினால்தான் வேலையாகும்போல,'' என்றாள் மித்ரா.''ஏன், மித்து. வரவர போலீசார் மேல 'கம்ப்ளைன்ட்' அதிகமா வருது கவனிச்சியா?''''ஆமாங்க்கா.. நானும் கேள்விப்பட்டேன், அதில் ஏதாவது லேட்டஸ்ட் உண்டா?''''அதைத்தான் சொல்ல வர்றேன். லிங்கேஸ்வரர் ஊரில், எஸ்.பி., ஏட்டு ஒருத்தர், போதையில போய், ஒரு வீட்டில் தகராறு செஞ்சு, வீட்டின் கண்ணாடியை உடைச்சிட்டாரு. அதே மாதிரி, '..த்துார்' ஸ்டேஷன் ஏட்டு ஒருத்தர், பல்லடத்திலுள்ள லேடி போலீஸ் வீட்டில் போய் பிரச்னை செஞ்சிருக்காரு,''''இந்த ரெண்டு ஏட்டுகளையும், எஸ்.பி., சஸ்பென்ட் செஞ்சிட்டாரு. இந்த மாதிரி ஏட்டய்யாக்கள் சிலரால, எஸ்.பி., ரொம்ப 'டென்ஷனா' இருக்காங்களாம்,''''மக்கள் தப்பு செஞ்சா, கண்டிக்கிற போலீஸ்காரங்களே தப்பு செஞ்சா, என்னன்னு சொல்றது,'' என்ற மித்ரா, ''சூரிய கட்சியில், சமாதானம் பேசுன கதை தெரியுங்களா?''''சொல்லுடி, தெரிஞ்சுக்கிறேன்,''''அக்கா... உள்ளாட்சி தேர்தலில், மாநகராட்சியிலுள்ள, 60 வார்டுகளில் போட்டியிட, 250க்கும் அதிகமானோர் விருப்பமனு கொடுத்திருக்காங்க. மனு கொடுத்தவங்களை வரவழைச்ச மாநகர நிர்வாகி, பஞ்சாயத்து செஞ்சிருக்காரு,''''அதாவது, நாங்க சொல்லற ஆளுதான் நிப்பாரு. மத்தவங்க வார்டுக்குள்ள எந்த கோஷ்டி பூசலும் செய்யாம 'கம்'னு இருக்கோணும்னு, சொல்லியிருக்காரு. கட்சிக்காக பாடுபடறவங்களுக்கு 'சீட்' கொடுக்காம, கைத்தடிகளுக்கு கொடுக்கறாங்கன்னுட்டு, பாதிக்கப்பட்டவங்க, கட்சி தலைமைக்கு பெட்டிஷன் அனுப்புற முடிவில இருக்காங்களாம்,''''இப்பவே பஞ்சாயத்தை ஆரம்பிச்சிட்டாங்களா?'' என்ற சித்ரா, ''பக்கத்தில 'காசியில் வாசி' ஊரில், ஹைவேஸ் டிபார்ட்மென்ட்டில், கலெக்ஷன் எக்கச்சக்கமாம்...''''அது என்னங்க்கா, விவகாரம்?''''ஒரு கான்ட்ராக்ட் நிறுவனம், ைஹவேஸ் அதிகாரிகளை 'கரெக்ட்' பண்ணி வச்சுட்டு, சாலை மராமத்து மற்றும் சீரமைப்பு வேலைகளை டெண்டர் எடுத்து கொள்கிறார். அப்புறம், அந்த வேலையை செய்யாமலேயே 'பில்' போட்டு, முழு பணத்தையும் வாங்கி வருவதை வழக்கமாக வச்சிருக்காராம்,''''அந்த 'விநாயகரின் வேறு பேர் கொண்ட கான்ட்ராக்டருக்கு, அதிகா ரிகள் பரிபூரண ஆசியாம். அவர் ஏற்கனவே கோவையில் இந்த மாதிரி தில்லாலங்கடி வேலையில் ஈடுபட்டதால், எந்த வேலையும் கொடுப்பது இல்லையாம். இப்ப '...நாசி' பக்கம், தன்னோட 'நாசி'யை நுழைக்கிறார்,''''ஏதோ ஒரு விதத்தில், சுருட்டிடறாங்க்கா?'' என்ற மித்துவிடம், ''இந்த மேட்டருக்கு சொல்லறயா? வேறு ஏதாவதா?'' என, கேட்டாள் சித்ரா.''கரெக்டா கேட்டீங்க. அதுக்கும்தான்... இதுக்கும்தான். அதே'...நாசி'யில், அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியில், ரெண்டு நாளைக்கு முன்னாடி, கின்னஸ் சாதனை பண்றோம் சொல்லிட்டு, ஒரு தனியார் நிறுவனம், மாணவியரிடம், பணம் வசூல் பண்ணியிருக்காங்க,''''இப்படி ஒட்டு மொத்தமா, பல லட்சம் ரூபாய் வசூல் பண்ணிட்டாங்களாம். விவரம் தெரிஞ்ச சில பேரண்ட்ஸ் கேட்டதற்கு, 'உங்க பொண்ணோட பேர் 'லிம்கா' சாதனை புக்கில்' வருமுன்னு சொல்லி சமாளிச்சுட்டாங்க. அந்த ஸ்கூலில், இப்படி எதுவுமே நடக்காதாம். சமீபகாலமாக இப்படி பண்றதால, பேரன்ட்ஸ் எல்லாம், கோவத்துல இருக்காங்க,''''அங்க சுத்தி, இங்க சுத்தி, எல்லா இடத்திலயும், பணத்தை 'அபேஸ்' பண்றதும் பல டெக்னிக் வச்சிட்டு, அலையறாங்க்கா. மடங்குற ஆட்களை மடக்குறாங்க. ம்... ம்... பூனைக்கு மணி கட்ட யாரும் வர மாட்டேங்கி றாங்களே,'' என்று புலம்பிய சித்ரா, ''ஓ.கே.., மித்து, மழை விட்டுடுச்சு, நான் கிளம்பறேன்,'' என்றவாறு, ெஹல்மெட் அணிந்து கொண்டு, வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X