பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் நன்னடத்தை விதிமுறை

Added : டிச 03, 2019
Share
Advertisement
விழுப்புரம்;விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில், உள்ளாட்சி தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் தொடர்பாக அனைத்து துறைகளின் அரசு அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கள்ளக்குறிச்சி கலெக்டர் கிரண்குராலா, எஸ்.பி.,க்கள் விழுப்பரம் ஜெயக்குமார், கள்ளக்குறிச்சி ஜெயச்சந்திரன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன் முன்னிலை
 உள்ளாட்சி தேர்தல் நன்னடத்தை விதிமுறை

விழுப்புரம்;விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில், உள்ளாட்சி தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் தொடர்பாக அனைத்து துறைகளின் அரசு அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் கிரண்குராலா, எஸ்.பி.,க்கள் விழுப்பரம் ஜெயக்குமார், கள்ளக்குறிச்சி ஜெயச்சந்திரன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் கல்வித்துறை, காவல், ஊரக வளர்ச்சி உட்பட பல்வேறு துறைகள் சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் விழுப்புரம் கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கி பேசியதாவது:விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில், உள்ளாட்சி தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் இன்று (நேற்று) முதல் அமலில் வந்துள்ளது. இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. வரும் ஜனவரி 4ம் தேதி வரை தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும்.முதலில், அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு அலுவலகம் சார்ந்த கட்டடங்களில் உள்ள சுவர் விளம்பரங்கள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த போஸ்டர்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். காவல் துறையினர் தங்களின் துப்பாக்கிகளை, எஸ்.பி., அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். வெடிமருந்து பொருட்கள் எவ்வளவு விற்பனை செய்யப்படுகிறது, தற்போது கையிருப்புகள் எவ்வளவு உள்ளது என்பதைக் கண்காணிக்க வேண்டும்.சோதனைச் சாவடிகளில் மதுபாட்டில்கள் கடத்துவது மட்டுமின்றி, அனைத்து வாகனங்களை சோதனை செய்யும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். ஓட்டுச்சாவடிகளில் 200 மீட்டர் தள்ளியே, வேட்பாளர்களோடு வரும் வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டும். இதை போலீசார் கண்காணிக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அரசியல்கட்சியினர் பொதுக்கூட்டம், தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும்.தேர்தலில் பஞ்சாயத்து வார்டு வேட்பாளர் 9,000 ரூபாய்க்குள் மட்டுமே செலவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் மூலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல், பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 34 ஆயிரம் ரூபாய். ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 85 ஆயிரம் ரூபாய். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவருக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்குள் செலவு செய்ய வேண்டும்.தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருப்பதால், புதிய பணி நியமன ஆணைகள், பணி இடமாற்றம் ஏதும் வழங்கப்படக்கூடாது. அது மட்டுமின்றி, புதிய அரசு ஒப்பந்தங்கள், அரசு சார்ந்த புதிய பணிகளை துவங்கக் கூடாது.அரசு திட்டங்களில், பயனாளிகளுக்கு எந்தவொரு நலத்திட்டங்களும் வழங்கக் கூடாது உட்பட வழக்கத்தில் தேர்தலின் போது உள்ள அனைத்து நடைமுறைகளையும், அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.தேர்தல் விதிமுறைகளை மீறுவோர் மீது, குற்ற நடவடிக்கையாக பதிவு செய்யப்பட்டு, மாநில தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று தேர்தல் அலுவலர்கள், மாவட்ட நிர்வாகம் மூலம் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, கலெக்டர் அண்ணாதுரை பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X