விழுப்புரம்;பழநிவேலு ஐ.டி.ஐ., தாளாளருக்கு கல்விச் சேவையை பாராட்டி மதிப்புரு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.
கண்டாச்சிபுரம் பழநிவேலு ஐ.டி.ஐ., கடந்த 25 ஆண்டுகளாக கிராமப்புற மாணவர்களுக்கு சிறந்த தொழிற்கல்வியை அளித்து வருகிறது. இங்கு படித்த 250 பெண்கள் அரசு மின்சார துறை அலுவலகத்திற்கு பணிக்கு சென்றுள்ளனர்.இதேபோன்று, ஐ.டி.ஐ., வளாகத்தில் உள்ள திருமுருக கிருபானந்த வாரியார் இலக்கிய பேரவை மூலம் ஆன்மிக பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், ஓய்வுபெற்ற மூத்த ஆசிரியர்கள் 16 பேருக்கு, கடந்த ஆசிரியர் தினத்தன்று வாழ்நாள் அறநெறி ஆசிரியர் விருது வழங்கப்பட்டது.இந்த சேவை பணிகளை பாராட்டி, சென்னை குளோபல் மனிதநேய பல்கலைக்கழகம் சார்பில் பழநிவேலு ஐ.டி.ஐ., தாளாளர் ராஜேந்திரனுக்கு, மதிப்புரு முனைவர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.