பொது செய்தி

தமிழ்நாடு

ஒருங்கிணைந்த மாவட்ட நிலையில் உள்ளாட்சி தேர்தல்; கலெக்டர் அண்ணாதுரை தகவல்

Added : டிச 03, 2019
Advertisement

விழுப்புரம்;விழுப்புரம் மாவட்டத்தில், ஊரக பகுதியில் 22 லட்சத்து 57 ஆயிரத்து 479 வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்கள் உள்ளாட்சி தேர்தல் மூலம் 9,866 உள்ளாட்சி பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படவுள்ளதாக கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கலெக்டர் அண்ணாதுரை, நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:விழுப்புரம் மாவட்டத்தில், மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பைத் தொடர்ந்து தேர்தல் நன்னடத்தை விதிகளை அமல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.இதில், அரசு அலுவலர்கள் என்னென்ன கடமைகள் நிறைவேற்ற வேண்டும் என தெளிவாக கூறப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை சிறப்பாக நடத்த, அனைத்து ஏற்பாடுகளையும் விரிவாக எடுத்துரைக்கபட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையம் அறிவுரைப்படி, தேர்தலை சிறப்பாக நடத்துவதற்கு, மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில், ஊரக பகுதியில் மட்டும் 22 லட்சத்து 57 ஆயிரத்து 479 வாக்காளர்கள் உள்ளனர். இந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் மூலம், 9,866 உள்ளாட்சி பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். ஊரக பகுதியில் 4,841 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது.ஓட்டுச்சாவடி அலுவலர்களாக மாவட்டத்தில் 34 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும்.மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம பஞ்சாயத்து தலைவருக்கு, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், பஞ்சாயத்து வார்டு உறுப்பினருக்கு, அந்த கிராமங்களில் உள்ள பஞ்சாயத்து அலுவலகங்களில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.
விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த நிலையில், அந்த கிராம பஞ்சாயத்து தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் முறையில் தேர்தல் நடக்கும். மாவட்டம் பிரிவினைக்கு முன்பு எந்த நிலையில் இருந்ததோ, அதே நிலையில் தேர்தல் நடைபெறும்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தேர்தல் தொடர்பாக அங்கு ஒரு கட்டுபாட்டு அறையை ஏற்படுத்தியுள்ளார். கலெக்டர் அலுவலகத்திலும் ஒரு கட்டுபாட்டு அறை ஏற்படுத்தப்பட உள்ளது. தேர்தலை சுமூகமாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. நன்னடத்தை விதிகள் ஊரக பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.இவ்வாறு அவர்கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X