பொது செய்தி

தமிழ்நாடு

அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் மனு

Added : டிச 03, 2019
Advertisement

விழுப்புரம்;விழுப்புரம் கே.கே.ரோடு ராஜிவ் காந்தி நகர் பகுதி மக்கள், அடிப்படை வசதி கேட்டு மனு அளித்தனர்.

விழுப்புரம் கே.கே.ரோடு ராஜிவ் காந்தி நகர் குடியிருப்பு பகுதி மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனு:விழுப்புரம் கே.கே.ரோடு ராஜிவ் காந்தி நகர் பகுதியில், கடந்த 40 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். இங்கு, சாலை வசதி, தெரு மின்விளக்கு வசதி, குடிநீர், கழிவுநீர் வாய்க்கால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு, அரசுக்கு பலமுறை மனு அளித்துள்ளோம். இருந்தும், இப்பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை.இப்பகுதி மக்களின் நலன்கருதி, சாலை வசதி உள்ளிட்ட திட்டங்களை விரைந்து செயல்படுத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X