அரசியல் செய்தி

தமிழ்நாடு

எம்.எல்.ஏ.,வுக்கு பா.ஜ., 'நோட்டீஸ்'

Added : டிச 03, 2019
Advertisement

புதுடில்லி, :உத்தர பிரதேசத்தில் பா.ஜ. தலைவர்கள் மீது ஊழல் புகார் கூறிய அக்கட்சி எம்.எல்.ஏ.விற்கு மேலிடம் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.உ.பி.யில் யோகி ஆதித்யநாத் தலைமையில்பா.ஜ. ஆட்சி நடக்கிறது. இங்கு காஜியாபாத் தொகுதி பா.ஜ. -- எம்.எல்.ஏ. நந்த் கிஷோர் குர்ஜார் முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதில் மாநில பா.ஜ. தலைவர்கள் சிலர் அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து செய்யும் ஊழலை அம்பலப் படுத்துவதால் தன்னை கொல்ல சதி நடப்பதாக அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.'வெளியில் இருப்பதை விட சிறை தான் எனக்கு பாதுகாப்பான இடம். எனவே அங்கு அனுப்பி விடுங்கள்' எனவும் அவர் கோரியிருந்தார். இந்நிலையில் உ.பி. மாநில பா.ஜ. தலைமை நந்த் கிஷோர் குர்ஜாருக்கு 'நோட்டீஸ்' அனுப்பிஉள்ளது. அதில் 'கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதுடன் உட்கட்சி விவகாரத்தை ஊடகங்களில் தெரிவித்ததால் உங்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதை ஒரு வாரத்திற்குள் தெரிவிக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.நந்த் கிஷோர் குர்ஜார் கூறியதாவது:சட்டவிரோத சுரங்கம்நில அபகரிப்பு பசு கடத்தல் ஆகியவற்றில் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதை ஆதாரத்துடன் தெரிவித்து அவர்கள் பணியிடை நீக்கத்திற்கு காரணமாக இருந்துள்ளேன். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான சில தலைவர்கள் அதிகாரிகளுடன் சேர்ந்து என் நன்மதிப்பை சீர்குலைக்கவும் கொலை செய்யவும் முயற்சிக்கின்றனர். ஏற்கனவே இருமுறை கொலை முயற்சியில் இருந்து தப்பியுள்ளேன். பெரிய தலைவர் ஒருவர் கூலிப்படையிடம் 30 லட்சம் ரூபாய் கொடுத்து என்னை தீர்த்துக் கட்ட முயன்றார். அந்த கூலிப்படையினரை போலீசார் கைது செய்துள்ளனர். என் மீதான புகார் குறித்து கட்சி மேலிடத்திற்கு விரைவில் விளக்கம் அளிப்பேன்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X