பொது செய்தி

தமிழ்நாடு

'சாந்தி' வனத்துக்கு ஆம்புலன்ஸ்

Added : டிச 03, 2019
Share
Advertisement
திருப்பூர்;'தி சென்னை சில்க்ஸ்' குழுமம், சாந்தி வனம் எரிவாயு மயானத்துக்கு, ரூ.15 லட்சம் மதிப்பிலான ஆம்புலன்ஸ் வழங்கியுள்ளது.திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், கருவம்பாளையம் ஏ.பி.டி., ரோடு மற்றும் சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள மயானம், வடக்கு ரோட்டரி மயான அறக்கட்டளையுடன் இணைந்து பராமரித்து வருகிறது.'சாந்தி வனம்' என பெயரிட்டுள்ள இந்த மயானத்தில், வடக்கு ரோட்டரி

திருப்பூர்;'தி சென்னை சில்க்ஸ்' குழுமம், சாந்தி வனம் எரிவாயு மயானத்துக்கு, ரூ.15 லட்சம் மதிப்பிலான ஆம்புலன்ஸ் வழங்கியுள்ளது.திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், கருவம்பாளையம் ஏ.பி.டி., ரோடு மற்றும் சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள மயானம், வடக்கு ரோட்டரி மயான அறக்கட்டளையுடன் இணைந்து பராமரித்து வருகிறது.'சாந்தி வனம்' என பெயரிட்டுள்ள இந்த மயானத்தில், வடக்கு ரோட்டரி சார்பில், 76 லட்சம் ரூபாய் மதிப்பில், எரிவாயு மயானம் அமைக்கப்பட்டுள்ளது. மயானத்துக்கு, உடல்களை எடுத்துவர தேவையான ஆம்புலன்ஸ் வாகனத்தை, சென்னை சில்க்ஸ் குழுமம் வழங்கியுள்ளது.ஆம்புலன்ஸ் வாகனத்தை, 'தி சென்னை சில்க்ஸ்' குழும அறக்கட்டளை இயக்குனர் நந்தகோபால் வழங்கினார்.நிகழ்ச்சியில், வடக்கு ரோட்டரி மயான அறக்கட்டளை சேர்மன் குப்புசாமி, ரோட்டரி தலைவர் ஸ்ரீதரன், செயலாளர் ராம சங்கரலிங்கம், பொருளாளர் பாலசந்தர், புறநகர் மயான அறக்கட்டளை தலைவர் சுப்பிரமணியம், பொருளாளர் லட்சுமணன், டயாலிசிஸ் அறக்கட்டளை சேர்மன் பாலசுப்பிரமணியன், எம்.எல்.ஏ., குணசேகரன், பில்டர்ஸ் அசோசியேஷன் முன்னாள் தலைவர் சண்முகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X