சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பெண் மனு

Added : டிச 03, 2019
Advertisement
 கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பெண் மனு

விழுப்புரம்;கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பெண் புகார் மனு கொடுத்தார்.

விழுப்புரம் அடுத்த கெங்கராம்பாளையத்தைச் சேர்ந்த நிர்மல் போஸ் மனைவி தேவி, 33; கொடுத்துள்ள மனு:கடந்த 2017ம் ஆண்டு பெற்றோர் ஏற்பாட்டின் பேரில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 7 மாதத்தில் என் கணவர், மஸ்கட்டிற்கு வேலைக்குச் சென்று விட்டார்.இதையடுத்து என் மாமியார் குடும்பத்தில் வசித்துவந்தபோது, எனக்கு வரதட்சணை கொடுமை செய்தனர்.இது குறித்து கடந்த ஜூலை மாதம் கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்தேன்.அதன்பேரில், விழுப்புரம் மகளிர் போலீசார் என்னை அழைத்து விசாரித்தனர். அப்போது, என் கணவர் 2020ம் ஆண்டு மஸ்கட்டில் இருந்து வந்து என்னுடன் வாழ்வதாக ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து என் கணவரை தொடர்பு கொண்டால், பேச மறுக்கின்றார். எனவே, என் கணவருடன் என்னை சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X