விழுப்புரம்;விழுப்புரத்தில் மயங்கி விழுந்த மூதாட்டி இறந்தார்.விழுப்புரம் அடுத்த நரையூரைச் சேர்ந்தவர் சாரங்கம் மனைவி இந்திராணி, 60; இவர் நேற்று மதியம் விழுப்புரத்தில் இருந்து தனியார் பஸ்சில் ஊருக்குச் சென்றார். விழுப்புரம் காந்தி சிலை அருகே திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால், பஸ்சிலிருந்து கீழே இறங்கினார். அங்கு, திடீரென மயங்கி விழுந்து இந்திராணி இறந்தார்.தகவலறிந்த விழுப்புரம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, இந்திராணி உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.