சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீபாவளி சீட்டு நடத்தி பணம் மோசடி கலெக்டர் அலுவலகத்தில் மனு

Added : டிச 03, 2019
Advertisement
 தீபாவளி சீட்டு நடத்தி பணம் மோசடி கலெக்டர் அலுவலகத்தில் மனு

கள்ளக்குறிச்சி;திருக்கோவிலுாரில் தீபாவளி சீட்டு நடத்தி 25 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த நபரிடமிருந்து, பணத்தை மீட்டு தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்டோர் புகார் மனு அளித்தனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் அளித்துள்ள புகார் மனு:திருக்கோவிலுார் என்.ஜி.ஓ., நகர் வள்ளலார் தெருவைச் சேர்ந்தவர் முரளிகிருஷ்ணன். திருக்கோவிலுார் நகைக்கடை வீதியில் நகைக் கடை நடத்தி வருகிறார். இவர் தீபாவளி பரிசுத் திட்டம் என்ற பெயரில் சீட்டு பிடித்து தீபாவளிக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி வருகிறார்.இவரிடம் பலர் ஏஜன்டாக இருந்து பொதுமக்கள் பலரிடம் பணம் வசூலித்தனர். கடந்த தீபாவளிக்காக திருக்கோவிலுார் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தில் பணம் கட்டி வந்தோம்.கடந்த தீபாவளிக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை கேட்டபோது தருவதாக கூறியவர், நகைக் கடை மற்றும் வீட்டை காலி செய்து தற்போது தலைமறைவாகி விட்டார். தீபாவளி பரிசுத் திட்டத்தில் நாங்கள் சேர்த்து விட்ட நபர்கள், தற்போது எங்களிடம் பணத்தை கேட்டு மிரட்டி வருகின்றனர்.இதனால், செய்வதறியாமல் திகைத்து வரும் எங்களுக்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து தலைமறைவாக உள்ள முரளிகிருஷ்ணனை கைது செய்து அவரிடமிருந்து பணத்தை மீட்டுத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இதேபோன்று ஒரு மனுவை எஸ்.பி., அலுவலகத்தில் அளித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X