சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ்காரர் தற்கொலை முயற்சி

Added : டிச 03, 2019
Advertisement

திருப்பூர்:திருப்பூரில் போலீஸ்காரர் விஷமருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.திருப்பூர் ரூரல் போலீஸ் ஸ்டேஷனில் போலீசாக பணியாற்றுபவர் கதிரேசன், 33. கோர்ட் பணிகளுடன், ரோந்து பணியும் இருந்ததால், அவருக்கு பணிப்பளு அதிகம் இருந்துள்ளது. நீண்ட நாட்களாக அவர் மாற்றுப் பணி ஒதுக்குமாறு கேட்டு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மூன்று நாள் விடுப்பு எடுத்துள்ளார். காலை அவர் பணிக்கு வந்த போது, அதிகாரிகள், கடுமையாக பேசியுள்ளனர். இதனால், மனமுடைந்த கதிரேசன், தாராபுரம் ரோட்டில் உள்ள கோவில்வழி போலீஸ் செக் போஸ்ட்டில், விஷம் அருந்தி மயங்கி விழுந்தார். அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு நல்லுாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து, எஸ்.பி., விசாரித்து வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X