பொது செய்தி

தமிழ்நாடு

ஓமன் நாட்டில் வேலை: விண்ணப்பம் வரவேற்பு

Added : டிச 03, 2019
Advertisement

விழுப்புரம்:ஓமன் நாட்டில் எலக்ட்ரிக்கல் பிரிவில் வேலை செய்ய விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கலெக்டர் அண்ணாதுரை செய்திக்குறிப்பு;ஓமன் நாட்டிலுள்ள ஒரு முன்னணி நிறுவனத்தில் பணிபுரிய ஐ.டி.ஐ., அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம்பெற்ற எலக்ட்ரிக்கல் டெக்னிஷியன், எலக்ட்ரிக்கல் ஓ.எச்., லைன்மேன் மற்றும் எலக்ட்ரிஷியன்ஸ் தேவைப்படுகின்றனர்.தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பணி அனுபவத்திற்கேற்ப 24 ஆயிரம் ரூபாய் முதல் 37 ஆயிரம் ரூபாய் வரை மாத ஊதியம் வழங்குவதுடன் விசா மற்றும் ஓமன் நாட்டின் சட்ட திட்டத்திற்குட்பட்ட இதர சலுகைகள் வெளிநாட்டு வேலையளிப்போரால் வழங்கப்படும்.இப்பணிக்கான நேர்முகத் தேர்வு வரும் 14 மற்றும் 15ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், திரு.வி.க., தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை - 600 032 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களின் சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பம், அசல் கல்விச் சான்றிதழ், அனுபவச் சான்றிதழ், பாஸ்போர்ட் மற்றும் நகல்கள், இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.மேலும் ஊதியம் மற்றும் பணி விபரங்களை அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளம் வாயிலாகவும் www.omcmanpower.com மற்றும் 044-22505886, 8220634389, 9566239685, 22502267 என்ற தொலைபேசி எண்களின் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X