ரயில்வே 'லெவல் கிராசிங்'கில் பாலம் : பணிகள் துவங்காததால் மக்கள் நான்கு ஆண்டு இழுபறி!

Added : டிச 03, 2019
Share
Advertisement
சோகம்பெ.நா.பாளையம்:துடியலுார், என்.ஜி.ஜி.ஓ., காலனி ரயில்வே 'லெவல் கிராசிங்'குகளில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண, புதிய பாலம் கட்ட, ஆய்வுப் பணி முடிந்து, நான்கு ஆண்டுகளாகியும் கட்டுமான பணி துவங்குவதில் இழுபறி நீடிக்கிறது.துடியலுார்- வெள்ளக்கிணறு ரோட்டில், கோவை வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகம் அமைந்துள்ள பகுதியில், கோவை- - மேட்டுப்பாளையம் ரயில் பாதையில்,

சோகம்பெ.நா.பாளையம்:துடியலுார், என்.ஜி.ஜி.ஓ., காலனி ரயில்வே 'லெவல் கிராசிங்'குகளில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண, புதிய பாலம் கட்ட, ஆய்வுப் பணி முடிந்து, நான்கு ஆண்டுகளாகியும் கட்டுமான பணி துவங்குவதில் இழுபறி நீடிக்கிறது.துடியலுார்- வெள்ளக்கிணறு ரோட்டில், கோவை வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகம் அமைந்துள்ள பகுதியில், கோவை- - மேட்டுப்பாளையம் ரயில் பாதையில், 'லெவல் கிராசிங்' உள்ளது.துடியலுாரில் இருந்து இப்பாதை வழியாக சரவணம்பட்டி, சின்னவேடம்பட்டி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று, சத்தி ரோட்டை அடையலாம். இதே போல கணபதி, மணியகாரம்பாளையம் வழியாக, கோவை நகரை சென்றடையலாம். இதனால், மேட்டுப்பாளையம் ரோட்டுக்கு மாற்றாக, இதை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.கடந்த, 2010ம் ஆண்டு முதல், கோவை- - மேட்டுப்பாளையம் இடையே, இயங்கி வந்த பாசஞ்சர் ரயில் தினமும், நான்கு முறை இயக்கப்படுகின்றன. பாசஞ்சர் ரயில், லெவல் கிராசிங்கை ஒவ்வொரு முறை கடக்கும் போதும், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.மேலும், ரயில்வே லெவல் கிராசிங் அருகே பாதை வளைந்து, நெளிந்து செல்வதால், 'டாரஸ்' போன்ற கனரக லாரிகள் சென்று வருவதில், சிக்கல் நீடிக்கிறது. இச்சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண, இப்பகுதியில் பாலம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதை தொடர்ந்து, இப்பகுதியில் பாலம் கட்ட, நெடுஞ்சாலைத் துறையினர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன், ஆய்வுப்பணி மேற்கொண்டனர்.மாநில நெடுஞ்சாலைத் துறையினர் கூறியதாவது:நாடு முழுவதும், எங்கெங்கு ரயில் லெவல் கிராசிங்குகள் உள்ளதோ, அங்கெல்லாம் பாலம் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் படிப்படியாக, செயல்படுத்தப்பட்டு வருகிறது.கோவை வடக்கு துடியலுார் - வெள்ளக்கிணறு ரோட்டில் ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகே (எல்.சி., 4) பகுதியில் பாலம் கட்ட ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இத்திட்டத்தில், ரயில் பாலத்தை ரயில்வே நிர்வாகமும், பாலத்தையொட்டி வருகிற சாலையை நெடுஞ்சாலைத் துறையும் மேற்கொள்ளும். முதல் கட்டமாக, இத்திட்டத்துக்கான ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, திட்டம் தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன், பணிகள் மேற்கொள்ளப்படும்.மேலும், துடியலுார் ரயில்வே ஸ்டேஷன் ரோடு முடியும் இடத்தில் பாலம் கட்ட முடியுமா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.என்.ஜி.ஜி.ஓ., அருகே இடிகரை ரோட்டில் உள்ள லெவல் கிராசிங் (எல்.சி., 5) பாலம் கட்ட ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.ஆய்வு அறிக்கைகள், அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஒப்புதல் கிடைத்து, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால், உடனடியாக பணிகள் துவக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X