பொது செய்தி

தமிழ்நாடு

கூடலுார் பேரூராட்சியில் ரூ.1.5 கோடியில் வளர்ச்சி பணி

Added : டிச 03, 2019
Advertisement

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலுார் பேருராட்சியில், ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கான பூமிபூஜை நடந்தது.மேட்டுப்பாளையம் தொகுதிக்குட்பட்ட கூடலுார் பேரூராட்சியில், எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதி, பேரூராட்சி பொதுநிதி, ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சித் திட்ட நிதி ஆகிய திட்டத்தில் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன.பேரூராட்சி அலுவலகத்துக்கு, கூடுதல் கட்டடம் கட்டுதல், 8ம் வார்டு, பிரகாஷ் லே அவுட், 17ம் வார்டு, விஜயலட்சுமி நகர், 18ம் வார்டு வெங்கடாசலபதி நகர், 6ம் வார்டு சின்னக்கண்ணான்புதுார், 1ம் வார்டு செல்வபுரம் ஆகிய பகுதிகளில் வடிகால்கள், பொதுக்கழிப்பறை கட்டுதல், தார்சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட உள்ளன.நேற்று முன்தினம், சின்னக்கண்ணான் புதுாரில் நடந்த பூமி பூஜைக்கு பேரூராட்சி செயல் அலுவலர் நந்தகுமார் தலைமை வகித்தார். பெரியநாயக்கன்பாளையம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் குருந்தாசலம் முன்னிலை வகித்தார்.மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., சின்னராஜ், கோவை வடக்கு எம்.எல்.ஏ., அருண்குமார் ஆகியோர் பணிகளைத் துவக்கி வைத்தனர். முன்னாள் கவுன்சிலர்கள் செல்வராஜ், நாகராஜ், குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X