செஞ்சி:விழுப்புரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பைக்கில் சென்ற வாலிபர் இறந்தார்.திருக்கோவிலுார் அடுத்த தகடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் சூரியபிரகாஷ், 26; இவர் நேற்று முன்தினம் விழுப்புரம் அருகே உள்ள சூரப்பட்டு கிராமத்திற்கு உறவினர் விட்டு திருமணத்திற்கு வந்திருந்தார்.இரவு 9:45 மணியளவில் சூரப்பட்டு கிராமத்தில் இருந்து கெடார் நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தார். கெடார் அங்காளம்மன் கோவில் அருகே வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சூரியபிரகாஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.