பொது செய்தி

தமிழ்நாடு

பணமில்லா பரிவர்த்தனை புதிய செயலி அறிமுகம்

Added : டிச 03, 2019
Advertisement

பெ.நா.பாளையம்:துடியலுாரில் பாரத் கேஸ் வாடிக்கையாளர்களுக்கு, பணமில்லா பரிவர்த்தனை செய்ய, புதிய செயலி அறிமுக விழா நடந்தது.பாரத் கேஸ் வாடிக்கையாளர்கள், தானியங்கி சேவையால், மொபைல் போன் வாயிலாக, கேஸ் சிலிண்டர் பதிவு செய்தால், வீட்டுக்கு சிலிண்டர் கொண்டு வரும் நபரிடம் பணம் கொடுக்கும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.தற்போது, பதிவு செய்யும்போதே, ஆன்லைனில் எளிதாக பணம் கட்டி விடலாம். இதற்காக பாரத்கேஸ் நிறுவனம் பே.டி.எம்., மற்றும் அமேசான் வாயிலாக பணம் கட்டுவதற்கான முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.நிகழ்ச்சியில், பே.டி.எம்., அமேசான் இணையதள வாயிலாக பணம் செலுத்துவதற்கான வழிமுறை குறித்து, விளக்கப்பட்டது.துடியலுார் அருகே வடமதுரையில் உள்ள கென்னடி கேஸ் நிறுவனத்தில் நடந்த விழாவுக்கு, பாரத்கேஸ் தென் பிராந்திய மேலாளர் தனபால் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், மண்டல மேலாளர் திலீப் ரீவல்டி, மண்டல ஒருங்கிணைப்பாளர் தரன்ராவ், விற்பனை மேலாளர் சசிதரன், கென்னடி கேஸ் உரிமையாளர் அண்ணாதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X