பொது செய்தி

தமிழ்நாடு

அரையாண்டு தேர்வு வந்தாச்சு... இன்னும் சைக்கிள் வந்து சேரலை!

Added : டிச 03, 2019
Advertisement

கோவை:அரையாண்டு தேர்வு நெருங்கவுள்ள நிலையிலும், இன்னும் இலவச சைக்கிள் விநியோகிக்காமல் இழுத்தடிப்பதாக, பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 1 மாணவர்களுக்கு, இலவச சைக்கிள் வினியோகிக்கப்படுகிறது. கிராமப்புறங்களிலும், போதிய பேருந்து வசதி இல்லாத இடங்களிலும், சைக்கிள் மூலமாகவே மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.இதற்காக நடப்பு கல்வியாண்டில், 138.43 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். காலாண்டு தேர்வு விடுமுறையின் போதே, சைக்கிள் உதிரி பாகங்கள் மாவட்ட வாரியாக அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதை பொருத்தி, பள்ளிகளுக்கு வினியோகிப்பது வழக்கம்.ஆனால், அரையாண்டு தேர்வு துவங்கவுள்ள நிலையிலும், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.பெற்றோர் சிலர் கூறுகையில், 'பள்ளி துவங்கி ஆறு மாதங்களாகி விட்டன. கல்வியாண்டு துவக்கத்தில், நலத்திட்ட பொருட்கள் வினியோகிக்காமல், காலம் கடத்தப்படுகிறது. விரைவில் மாணவர்களுக்கு வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X