சூலுார்:கே.பி.ஆர்., பொறியியல் கல்லுாரியின், மகளிர் மேம்பாட்டு அமைப்பு சார்பில், சாதனை பெண்களை பாராட்டி, ஊக்கப்படுத்தும் வகையில், 'கே.பி.ஆர்., பிளையிங் பீ' விருது வழங்கப்படுகிறது.கல்லுாரி வளாகத்தில் நடந்த விழாவில், உதவி பேராசிரியை திவ்யா வரவேற்றார். அலங்காரம் மற்றும் கைவினை பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வரும், கோவை பாரதிபுரத்தை சேர்ந்த ராதிகாவுக்கு, 'பிளையிங் பீ' விருது வழங்கி, முதல்வர் அகிலா பாராட்டினார்.இளம் வயதிலேயே எளிதில் உடைந்து விடக்கூடிய எலும்பு நோயால், பாதிக்கப்பட்ட ராதிகா, வீட்டில் இருந்தபடியே உயர்கல்வி படித்துக்கொண்டே, பழைய பேப்பர்களை கொண்டு, பலவிதமான கைவினை பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.பெற்றோர் மற்றும் சகோதரரின் உதவியால் தன்னால் சாதிக்க முடிந்தது என, அப்பெண் கூறினார். மகளிர் மேம்பாட்டு அமைப்பின் தலைவி ஜானகி நன்றி தெரிவித்தார்.