அன்னுார்:உள்ளாட்சி தேர்தலுக்காக, அன்னுார் ஒன்றியத்தில், 139 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, அன்னுார் ஒன்றியத்தில், 21 ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச்சாவடிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக, மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சியில், 11 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக பச்சாபாளையம், நாரணாபுரம், குப்பனுார், அக்கரை செங்கப்பள்ளி, கணுவக்கரை ஆகிய ஊராட்சிகளில் தலா, ஐந்து ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இரண்டு ஓட்டுச்சாவடிகள் ஆண்களுக்கு எனவும், இரண்டு ஓட்டுச்சாவடிகள் பெண்களுக்கு எனவும், 135 ஓட்டுச்சாவடிகள் இருபாலரும் வாக்களிக்கும்படியும் அமைக்கப்பட்டுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE