பொது செய்தி

தமிழ்நாடு

அன்னுார் ஒன்றியத்தில் 82 ஆயிரம் வாக்காளர்கள்

Added : டிச 03, 2019
Advertisement

அன்னுார்:அன்னுார் ஒன்றியத்தில், 82 ஆயிரத்து 742 வாக்காளர்கள் உள்ளனர்.உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, அரசியல் கட்சியினர், 'மாஜி' ஊராட்சி தலைவர்கள், அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு வருகின்றனர்.இரண்டு இணைப்பு பட்டியல் சேர்க்கப்பட்டு, வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அன்னுார் ஒன்றியத்தில், 21 ஊராட்சிகளில், 40 ஆயிரத்து 452 ஆண் வாக்காளர்களும், 42 ஆயிரத்து 290 பெண் வாக்காளர்கள், நான்கு திருநங்கைகள் என, மொத்தம் 82 ஆயிரத்து 742 வாக்காளர்கள் உள்ளனர்.ஆண் வாக்காளர்களை விட, ஆயிரத்து 838 பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.அதிகபட்சமாக, மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சியில், 8,857 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக, நாரணாபுரம் ஊராட்சியில், 1,931 வாக்காளர்கள் உள்ளனர். அதற்கு அடுத்து பச்சாபாளையம் ஊராட்சியில், 2,011 வாக்காளர்கள் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X