பொது செய்தி

தமிழ்நாடு

பண்பாட்டை பிரதிபலித்த ஒயிலாட்டம்: பங்கேற்ற பார்வையாளர்கள் பரவசம்

Added : டிச 03, 2019
Advertisement
 பண்பாட்டை பிரதிபலித்த ஒயிலாட்டம்: பங்கேற்ற பார்வையாளர்கள் பரவசம்

சூலுார்;முத்துக்கவுண்டன்புதுார் சங்கமம் கலைக்குழுவின், ஒயிலாட்ட அரங்கேற்ற விழா பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்று ஒயிலாட்டம். இந்த ஒயிலாட்டம், கோவில் திருவிழாக்களில், தமிழ் கலாசாரத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விதமாக ஆடப்பட்டு வருகிறது.கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு வட்டார கிராமப்பகுதிகளில், நமது நாட்டின் பழம் பெருமையை, மக்கள் மனதில் விதைக்கும் பணியை செய்து வருகிறார், சங்கமம் கலைக்குழு ஒருங்கிணைப்பாளரும், அரசு பள்ளி தலைமையாசிரியருமான கனகராஜ்.கருமத்தம்பட்டி, தண்ணீர் பந்தல், க.ராயர்பாளையம், வாகை, கிட்டாம்பாளையம், எம்.பாப்பம்பட்டி, அருகம்பாளையம், சின்னியம்பாளையம், வடுகபாளையம், வெள்ளாண்டிபாளையம் உள்ளிட்ட, 18க்கும் மேற்பட்ட கிராமங்களில் சங்கமம் ஒயிலாட்ட குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.அதன், தொடர்ச்சியாக சூலுார் அடுத்த மு.க.புதுாரில் ஒயிலாட்ட குழுவின் அரங்கேற்ற விழா நேற்று முன்தினம் நடந்தது. ஒயிலாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைகளை, இளைய தலைமுறையிடம் கொண்டு சேர்ப்பதில் அனைவரின் பங்களிப்பு அவசியம் என, விழாவில் வலியுறுத்தப்பட்டது. 'நெஞ்சமெனும் கோவிலிலே நீ வரவேண்டும் தாயே' என்ற பக்தி பாடலுடன் துவங்கிய ஒயிலாட்டத்தில், சிறுவர், சிறுமியர் மற்றும் பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 'மனசும் மனசும் ஒன்றாய் சேர்ந்தால் மறக்கமுடியுமா?' என, பாடகர் சின்னசாமி பாட, இசை கலைஞர் சிவசக்தி சண்முகம், சிவ குகன் பம்பை வாசிக்க, பங்கேற்ற பார்வையாளர்கள் பரவச மழையில் நனைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X