பெ.நா.பாளையம்:தடாகம் வட்டாரத்தில், நேற்று முன்தினம் கடும் மழை பெய்தது. கோவையை சேர்ந்த ஜெகதீசன், 41, காரில் ஆனைகட்டி சென்று விட்டு, கோவை திரும்பினார்.சோமையனுாரை அடுத்த குண்டுபெருமாள் கோவில் அருகே வந்த போது, அங்கிருந்த பள்ளத்தில் தண்ணீர் வேகமாக, பெருக்கெடுத்து ஓடியது. பள்ளத்தை காரில் கடக்க ஜெகதீசன் முயன்றார். நீரின் வேகத்தால், கார் இழுக்கப்பட்டு பள்ளத்தில் விழுந்தது.இதில், ஜெகதீசனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவ்வழியாக சென்றவர்கள், பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் காரை மீட்டனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.