பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளை தங்கத்துக்கு நிலையான விலை கிடைக்குமா? வேளாண்துறை உதவ விவசாயிகள் காத்திருப்பு

Added : டிச 03, 2019
Advertisement
 வெள்ளை தங்கத்துக்கு நிலையான விலை கிடைக்குமா? வேளாண்துறை உதவ விவசாயிகள் காத்திருப்பு

உடுமலை;நடப்பு சீசனில், மத்திய பருத்திக்கழகம் நிர்ணயித்துள்ள ஆதார விலை கிடைக்க வேளாண்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பருத்தி விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.உடுமலை சுற்றுப்பகுதியில், பி.ஏ.பி., மண்டல பாசனத்துக்கு முன்பு பருத்தி பிரதான சாகுபடியாக இருந்தது. விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்பட, உதவியாக இருந்ததால், பருத்தியை வெள்ளைத்தங்கம் என அழைத்து வந்தனர். பருத்தி சாகுபடியில், புதுவிதமான நோய்த்தாக்குதல், மண்டல பாசன நாட்கள் குறைக்கப்பட்டது மற்றும் அறுவடை சீசனில் விலை கிடைக்காதது ஆகிய காரணங்களால், சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்தது. வட்டாரத்தில், 10 ஆயிரம் ஏக்கர் வரை இருந்த சாகுபடி, நுாறு ஏக்கராக குறைந்தது.கடந்த சில ஆண்டுகளாக பருத்தி சாகுபடியை ஊக்குவிக்க, மத்திய அரசு சில மானியத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நடப்பு சீசனில் அந்தியூர், விருகல்பட்டி, அடிவள்ளி உட்பட பல்வேறு கிராமங்களில், மானாவாரியாகவும், பி.ஏ.பி., பாசனத்துக்கும் மிக நீண்ட இழை பருத்தி ரகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தொடர் மழையால் செடிகளில் சில பாதிப்பு இருந்தாலும், நிலையான விலை கிடைக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர்.இப்பிரச்னைக்கு தீர்வாக, மத்திய பருத்திக்கழகம், பருத்தி ரகங்களுக்கு ஆதார விலை நிர்ணயித்து கடந்த அக்., மாதத்தில் அறிவிப்பு வெளியிட்டது.அதன்படி, பெங்கால் டெசி உட்பட குறுகிய இழை ரகங்கள், குவிண்டால், 4,755 ரூபாய், எம்.சி.யு.,7 உட்பட மத்திய ரக இழை குவிண்டால், 5,105 ரூபாய் என ஆதார விலை நிர்ணயித்து அறிவிப்பு வெளியிட்டது.நுாலிழை நீளம் உட்பட தரங்களின் அடிப்படையில், இந்த ஆதார விலை பட்டியல், செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்து.விரைவில், உடுமலை பகுதியில், பருத்தி அறுவடை துவங்க உள்ளது. எனவே, வேளாண்துறையினர், வேளாண் வணிகத்துறையினர், இடைத்தரகர்கள் ஆதிக்கத்தை குறைத்து, மத்திய பருத்திக்கழகம் நிர்ணயித்துள்ள ஆதார விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலையான விலை கிடைத்தால், ஒவ்வொரு சீசனிலும், பருத்தி சாகுபடி பரப்பு அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X