உடுமலை:கோ-ஆப்டெக்சில் கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு தள்ளுபடி விற்பனை துவங்கியுள்ளது.உடுமலை சீனிவாசா வீதியில், கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையம் உள்ளது. இங்கு, கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி, சிறப்பு தள்ளுபடி விற்பனை டிச., 1ம் தேதி முதல் துவங்கியுள்ளது.அனைத்து கைத்தறி ரகங்களுக்கும், 20 முதல் 30 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி உண்டு. இதில், காஞ்சிபுரம் பட்டு சேலைகள், மென்பட்டு பாலி காட்டன் சேலைகள், சென்னிமலை போர்வைகள், மெத்தை விரிப்புகள், பவானி ஜமுக்காளம், லுங்கிகள், ரெடிமேட் சட்டைகள், சுடிதார், நைட்டி, காட்டன் பிரின்ட் சேலைகள் என அனைத்து ரகங்களும் சிறப்பு விற்பனைக்கு உள்ளது.அரசு ஊழியர்கள், அரசு சார்ந்த நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் கடன் வசதி வழக்கம் போல், வழங்கப்படுகிறது. மேலும், கனவு-நனவு என்ற சிறப்பு திட்டமும் செயல்பாட்டில் உள்ளதாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.