பொது செய்தி

தமிழ்நாடு

மூன்று ஒன்றியங்களில் இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு: தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்

Added : டிச 03, 2019
Advertisement

உடுமலை:உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களில், இரண்டாம் கட்டமாக, வரும் 30ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல்கள், வரும், 27ம் தேதி மற்றும் 30ம் தேதி என இரு கட்டங்களாக நடக்கும் என அறிவித்துள்ளது.திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 13 ஊராட்சி ஒன்றியங்களில், முதல் கட்டமாக, ஏழு ஒன்றியங்களிலும், இரண்டாம் கட்டமாக, ஆறு ஒன்றியங்களிலும் தேர்தல் நடக்கிறது.உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஆகிய மூன்று ஒன்றியங்களில், இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கிறது. உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகளில், 254 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, 23 ஊராட்சிகளுக்கு, 126 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மடத்துக்குளம் ஒன்றியத்தில், 11 ஊராட்சிகள்; 80 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகளில், 333 வார்டு உறுப்பினர் பதவிகள், 26 ஒன்றியக்கவுன்சிலர் மற்றும் இரண்டு மாவட்ட கவுன்சிலர் பதவிகள் உள்ளன.குடிமங்கலம் ஒன்றியத்தில், இரு மாவட்ட ஊராட்சி, 13 ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 23 ஊராட்சித்தலைவர்கள் மற்றும் 201 வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடக்கிறது.உள்ளாட்சி பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல், வரும் 6ம் தேதி துவங்கி, 13ம் தேதி வரை நடக்கிறது. 16ம் தேதி, வேட்பு மனுக்கள் பரிசீலனை, 18ம் தேதி, வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கால அவகாசம் வழங்கப்படுகிறது.இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, மூன்று ஒன்றியங்களிலும், இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நாளான, 30ம் தேதி நடக்கிறது.அன்று காலை, 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி, மாலை, 5:00 வரை நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை, ஜன.,2ம் தேதி நடக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்ற, வார்டு உறுப்பினர்கள், ஊராட்சித்தலைவர் பதவி ஏற்பு, 6ம் தேதி நடக்கிறது. மாவட்டக்குழு தலைவர், ஊராட்சி ஒன்றியத்தலைவர், துணைத்தலைவர், கிராம ஊராட்சி துணைத்தலைவர் ஆகியோரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல், ஜன.,11ம் தேதி நடக்கிறது.தேர்தல் நடத்துவதற்கான, தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல், நான்கு வண்ண ஓட்டுச்சீட்டு, ஓட்டுப்பெட்டிகள், தேர்தலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் ஓட்டுச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X