பொது செய்தி

தமிழ்நாடு

வாழவயல் பகுதியில் பாலம் அமைத்தால் பயன்

Added : டிச 03, 2019
Share
Advertisement
பந்தலுார்:பந்தலுார் அருகே, தேவாலா வாழவயல் பகுதியில் பில்லுக்கடை அமைந்துள்ளது. நகராட்சியின், 3வது வார்டில் உள்ள இங்கு, 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இங்கு கிராம மக்கள் நடந்து செல்லும் ஒற்றையடி நடைபாதையை சீரமைத்து தர வலியுறுத்தியும், தீர்வு காணப்படவில்லை. இதனால், இரவு நேரங்களில் பாதசாரிகள் நடந்து செல்லும்போது, பாம்பு, தேள் போன்ற ஊர்வன வருவது

பந்தலுார்:பந்தலுார் அருகே, தேவாலா வாழவயல் பகுதியில் பில்லுக்கடை அமைந்துள்ளது. நகராட்சியின், 3வது வார்டில் உள்ள இங்கு, 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இங்கு கிராம மக்கள் நடந்து செல்லும் ஒற்றையடி நடைபாதையை சீரமைத்து தர வலியுறுத்தியும், தீர்வு காணப்படவில்லை. இதனால், இரவு நேரங்களில் பாதசாரிகள் நடந்து செல்லும்போது, பாம்பு, தேள் போன்ற ஊர்வன வருவது தெரியாமலும், வனவிலங்குகள் வந்தால், தப்ப முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.அத்துடன் நீரோடையை கடந்தே கிராமத்திற்கு செல்ல வேண்டிய நிலையில், மழை காலம் துவங்கினால் இந்த ஒற்றையடி பாதையையும் பயன்படுத்த முடியாமல் திண்டாடும் நிலை மக்களுக்கு ஏற்படுகிறது. இந்த நீரோடையை கடக்க பாலம் அமைத்து, நடைபாதையை சிமென்ட் நடைபாதையாக மாற்ற நகராட்சி நிர்வாகம் முதல், மாவட்ட கலெக்டர் வரை மனு கொடுத்தும் தீர்வு காணப்படவில்லை.இந்த பகுதியில் கடந்த காலங்களில் வெற்றிப்பெற்ற மக்கள் பிரதிநிதிகளும் கண்டுக்கொள்ளாததால், மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து தீர்வு காண வேண்டியது அவசியமாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X