பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுலா வாகனங்களுக்கு தடை: கல்லட்டி சாலையில் விபத்து குறைவு

Added : டிச 03, 2019
Advertisement

ஊட்டி:ஊட்டி - கல்லட்டி சாலையில் கோர்ட் உத்தரவுப்படி, இரவு நேரம் போக்குவரத்து தடை உள்ளது. பகல் நேரங்களில், உள்ளூர் வாகனங்களில், அனுமதி பெற்றவை மட்டும் அனுமதிக்கப்படுகின்றன. இந்த சாலையில் விபத்துகளை தவிர்ப்பதற்காக, கடந்த ஆண்டு முதல், சுற்றுலா வாகனங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால், இச்சாலையில், நடப்பாண்டில் விபத்தும் ஏற்படவில்லை.இந்நிலையில், இந்த சாலையில், மீண்டும் சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக, தகவல்கள் பரவின. பல சுற்றுலா வாகனங்கள் அவ்வழியாக செல்ல முற்பட்ட போது, போலீசார் அவற்றை திருப்பி அனுப்பினர்.நீலகிரி எஸ்.பி., சசிமோகன் கூறுகையில், ''கல்லட்டி சாலையில், 2017ம் ஆண்டு, ஏழு விபத்துகள்; 2018ம் ஆண்டு, எட்டு விபத்துகள் நடந்து, பல உயிர்பலிகள் ஏற்பட்டது. இதை தொடர்ந்து, கடந்த ஆண்டு முதல், சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X