பொது செய்தி

தமிழ்நாடு

ஆங்கிலேயர் காலத்து பாதாள கழிவுநீர் பாதை: சீரமைத்தால் மழை கால சிக்கல் தீரும்

Added : டிச 03, 2019
Advertisement

குன்னுார்:'குன்னுார் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட கழிவுநீர் பாதைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.குன்னுார் ஒய்.எம்.சி.ஏ., அரங்கில் சமூக நல அமைப்புகளின் கூட்டம் நடந்தது. ஒய்.எம்.சி.ஏ., செயலாளர் பிரேம் ஆனந்த் வரவேற்றார். ஒய்.எம்.சி.ஏ., தலைவர் ஸ்டீபன் ஜெயசீலன் தலைமை வகித்தார். மக்கள் சேவை மைய ஒருங்கிணைப்பாளர் மனோகரன், செயலாளர் சபாபதி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், சமீபத்தில் மழையால், ஏற்பட்ட பாதிப்புகள், பஸ் ஸ்டாண்ட் சாலையின் அவலநிலை குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட பாதாள கழிவுநீர் பாதைகள் பராமரிப்பு இல்லாததாலும், ஆக்கிரமிப்பாலும், மழை நீர் சாலையில் ஓடி சேதமடைகிறது. சாலையை சீரமைப்பதுடன், பல இடங்களில் ஏற்படும் பேரிடர் பாதிப்புக்கு தீர்வு காண வேண்டும்; சேதமடைந்து சீரமைக்காமல் உள்ள சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மோட்டார் வாகன பழுது பார்ப்போர் நலச் சங்க தலைவர் ஹேன்குமார், ஓய்வு பெற்ற கல்வி அலுவலர் குமார், ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் மேத்யூ, மவுண்ட் பிளசன்ட் சமூக ஆர்வலர் குணசேகரன், வண்ணார பேட்டை நலசங்க ஜெயராம், சமூக ஆர்வலர் புவனேஸ்வரி, ஜுவல்லரி சங்க தலைவர் உசைன் உட்பட பலர் பங்கேற்றனர். லட்சுமி நாராயணன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X