சாலையில் காட்டு யானைகள்: அரசு பஸ் பயணிகள் அச்சம்

Added : டிச 03, 2019
Advertisement

மஞ்சூர்:மஞ்சூர்-கோவை சாலையில் அரசு பஸ்சை, வழிமறித்த காட்டு யானைகளால், பயணிகள் அச்சம் அடைந்தனர்.மஞ்சூர் - கோவை சாலையில், கடந்த சில நாட்களாக குட்டிகளுடன் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அவ்வப்போது, இந்த யானைகள் சாலைகளில் நடந்து, செல்வதால் வாகனங்களை எச்சரிக்கையுடன், இயக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.இந்நிலையில், மஞ்சூரில் இருந்து கோவைக்கு, 40 பயணிகளுடன் புறப்பட்ட அரசு பஸ், கெத்தை மலைப்பாதையில், பெரும்பள்ளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, குட்டியுடன் நான்கு யானைகள் சாலையில் நின்றிருந்தன.சில நிமிடங்கள் சாலையில் முன்னே சென்று மீண்டும் திரும்பி வந்ததால், பஸ்சில் இருந்த பயணிகள் அச்சம் அடைந்தனர்.தொடர்ந்து, சப்தம் எழுப்பியதால், சாலை ஓரத்தில் நின்ற யானைகளை, அரசு பஸ் கடந்த சென்ற போதும் எந்த தொந்தரவும் செய்யவில்லை. பயணிகள் நிம்மதியடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X