பொது செய்தி

தமிழ்நாடு

முதுமலையில் மழை: யானை சவாரி ரத்து

Added : டிச 03, 2019
Share
Advertisement
கூடலுார்:முதுமலையில், மழை காரணமாக யானை சவாரி ரத்து செய்யப்பட்டது.முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளை வாகன சவாரி, யானை சவாரி மூலம், வனத்துறையினர் வனப்பகுதிக்கு அழைத்து சென்று வருகின்றனர். யானை சவாரி செய்வதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். முதுமலையில் மழை பெய்ததால், நேற்று, யானை சவாரி, தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. 'யானை சவாரி' எதிர்பார்த்து வந்த சுற்றுலா

கூடலுார்:முதுமலையில், மழை காரணமாக யானை சவாரி ரத்து செய்யப்பட்டது.முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளை வாகன சவாரி, யானை சவாரி மூலம், வனத்துறையினர் வனப்பகுதிக்கு அழைத்து சென்று வருகின்றனர். யானை சவாரி செய்வதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். முதுமலையில் மழை பெய்ததால், நேற்று, யானை சவாரி, தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. 'யானை சவாரி' எதிர்பார்த்து வந்த சுற்றுலா பயணிகள், ஏமாற்றதுடன் திரும்பி சென்றனர்.வனத்துறையினர் கூறுகையில், 'திடீர் மழையால், மண்ணில் ஈர தன்மை ஏற்பட்டது. அதில், சுற்றுலா பயணிகளை சுமந்து செல்வதில் ஆபத்து உள்ளதால், தற்காலிகமாக யானை சவாரி ரத்து செய்யபட்டது. இரவு மழை பெய்யவில்லை எனில், நாளை (இன்று) வழக்கம் போல் யானை சவாரி நடைபெறும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X