வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பாதிப்பு: சாலையில் அணிவகுத்த வாகனங்கள்

Added : டிச 03, 2019
Share
Advertisement
ஊட்டி:குன்னுாரில் பெய்த கனமழையின் காரணமாக, கேத்தி உட்பட பல்வேறு பகுதியில், வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் சிரமப்பட்டனர்.ஊட்டி, குன்னுார், குந்தா, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது.அதில், பல இடங்களில் மரம் விழுந்து மண்சரிவு ஏற்பட்டது. ஊட்டி-குன்னுார் சாலையில், வேலிவியூவில், பகல், 12:30 மணிக்கு சாலையோர சீகை மரம் விழுந்து ஒரு
 வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பாதிப்பு: சாலையில் அணிவகுத்த வாகனங்கள்

ஊட்டி:குன்னுாரில் பெய்த கனமழையின் காரணமாக, கேத்தி உட்பட பல்வேறு பகுதியில், வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் சிரமப்பட்டனர்.ஊட்டி, குன்னுார், குந்தா, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது.அதில், பல இடங்களில் மரம் விழுந்து மண்சரிவு ஏற்பட்டது. ஊட்டி-குன்னுார் சாலையில், வேலிவியூவில், பகல், 12:30 மணிக்கு சாலையோர சீகை மரம் விழுந்து ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தீயணைப்பு துறையினர் சம்பவ பகுதிக்கு வந்து 'பவர்மெஷின்' உதவியுடன் மரத்தை அறுத்து அகற்றிய பின் போக்குவரத்து சீரானது. கேத்திபாலாடாவில் கன மழையால் கடை, வீடுகளில் மழை நீர் சூழ்ந்தது. வீடுகளில் சூழ்ந்த மழை நீரை வெளியேற்ற மக்கள் சிரமப்பட்டனர். ஊட்டி சேரிங்கிராஸ் பஸ் ஸ்டாப்பை மழை நீர் சூழ்ந்ததால் பயணியர் பாதிக்கப்பட்டனர். தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. குன்னுாரில் பெய்த மழையால், மண்சரிவு ஏற்பட்டு, பர்லியார் சாலையில், வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது; அதனால், அங்குள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டு, வெறிச்சோடி காணப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X