சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பூஜைக்கு பாதுகாத்த பூக்கள்; இறுதி யாத்திரையில் சேர்ந்த சோகம்

Added : டிச 03, 2019
Advertisement
 பூஜைக்கு பாதுகாத்த பூக்கள்; இறுதி யாத்திரையில் சேர்ந்த சோகம்

விருந்தாளியாக வந்தவர் விபத்தில் பலிஉயிரிழந்த ஆனந்தகுமாரின் உறவினர் ருக்மணி. இவர் புன்செய் புளியம்பட்டியில் இருந்து நேற்று முன்தினம் நடூர் வந்தார். ஆனந்தகுமாரின் குழந்தைகள், லோகுராம், அட்சயா உடன் விளையாடினார். மேலும், அருகில் உள்ள உறவினர்களின் வீடுகளுக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் மாலை சொந்த ஊருக்கு கிளம்புவதாக இருந்தது.மழை பொழிந்ததால், ஆனந்தகுமார் வீட்டில் இரவு தங்கிவிட்டு நேற்று காலை ஊருக்கு கிளம்ப திட்டமிட்டிருந்தார்.
ஆனால் அதிகாலை சுவர் இடிந்து விழுந்த விபத்தில், அவரும் உயிரிழந்தார். விருந்தாளியாக வந்து விபத்தில் ருக்மணி உயிரிழந்தது அவரது குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உறங்க வந்து மீளா துயிலுக்கு சென்ற பக்கத்து வீட்டு பெண்கள்: ஆனந்தகுமாரின் வீட்டுக்கு அருகில் வசித்தவர் திலகவதி. இவர் ஆனந்தகுமாரின் மனைவி நதியா உடன் உள்ள நட்பால் அடிக்கடி வீட்டுக்கு வருவார். நேற்று முன்தினம் பெய்த கனத்த மழையால் அவரது வீட்டுக்கூரை ஒழுகியது. இதையடுத்து அவர் நதியாவின் வீட்டில் இரவில் துாங்குவதற்காக வந்தார். ருக்மணியுடன் பேசி விட்டு இரவு உறங்கச் சென்றவர் அதிகாலையில் நடந்த விபத்தில் உயிரிழந்தார். அவர் உயிரிழந்த செய்தி கேட்டு அங்கு வந்த அவரது தாயார் சின்னம்மாள் மருத்துவமனையில் கதறி அழுதது மனதை உருக்குவதாக இருந்தது. இதேபோல், விபத்தில் உயிரிழந்த சிவகாமியின் வீட்டில், பக்கத்து வீட்டு பெண் மங்கம்மாள் என்பவரும் நேற்று முன் தினம் தங்கினார். அவரும் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.பூஜைக்கு பாதுகாத்தது!சுவர் இடிந்து வீட்டின் மேல், விழுந்ததில், 17 பேர் உயிரிழந்தனர். கட்டட இடிபாடுகளில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் சுக்கு நுாறாக நொறுங்கி உருக்குலைந்து காணப்பட்டன.
வீட்டில் இருந்த பீரோக்கள் உருக்குலைந்து கிடந்தன. சைக்கிள், இன்டெக்சன் ஸ்டவ், கேஸ் அடுப்பு, கட்டில் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் உருக்குலைந்து காட்சியளித்தன.கோவிலுக்கு எடுத்து செல்வதற்காக டிபன் பாக்ஸில் வைக்கப்பட்ட, அரளிப் பூக்கள் ஒயர் கூடையில் வைக்கப்பட்டிருந்தன.விபத்தில் அனைத்து பொருட்களும் உருக்குலைந்து போன நிலையில் கூடையில் இருந்த டிபன் பாக்ஸ், அதிலிருந்த பூக்கள் அப்படியே இருந்தன. உறவினர்கள், 'பூஜைக்காக எடுத்து வச்சது இப்போது இவங்க இறுதி யாத்திரைக்கு போயுருச்சே,' என, அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X