பொது செய்தி

தமிழ்நாடு

சிவன் கோயில்களில் சங்காபிஷேகம்

Added : டிச 03, 2019
Advertisement
 சிவன் கோயில்களில் சங்காபிஷேகம்

ராஜபாளையம்:ராஜபாளையம்திருச்சிற்றம்பல குருநாத சுவாமி கோயிலில் கார்த்திகை மூன்றாவது சோம வாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம், லட்சார்ச்சனை நடந்தது.

காலை முதலே சிறப்பு யாகம்,சங்காபிஷேகம் கலசாபிஷேகம் யாக வேள்வி தொடங்கியது.தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு வகையான அபிஷேகங்கள், 108 சங்காபிஷேகம், கலசாபிஷேகம், லட்சார்ச்சனை நடைபெற்றது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதுபோல் சொக்கர் கோயில், மாயூரநாதசுவாமி கோயில், தெற்கு வெங்காநல்லூர் சிதம்பரேஸ்வரர் கோயில், பர்வதவர்த்தினி அம்மன் வளாகம் சிவாலயத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
விருதுநகர்
விருதுநகரில் சொக்கநாத சுவாமி கோயிலில் கார்த்திகை 3வது சோமவாரத்தை முன்னிட்டு உலக நன்மைக்காக 1008 சங்காபிஷேகம் நடந்தது. கோயில் வளாகத்தில் லிங்க வடிவத்தில் அலங்கரித்த 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு அதற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதையடுத்து மூலவருக்கு புனித நீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X