பொது செய்தி

தமிழ்நாடு

சிதறிக்கிடந்த பாட புத்தகங்கள்

Added : டிச 03, 2019
Advertisement

மேட்டுப்பாளையம் நடூரில் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில், மூன்று குடும்பத்தை சேர்ந்த, 17 பேர் இறந்தனர். இடிபாடுகளில் சிக்கி இறந்த அருக்காணி மகள் ஹரிசுதா பிளஸ் 1, சிவகாமி மகள் நிவேதா பிளஸ் 2, மகன் ராமநாதன், 10ம் வகுப்பும், ஆனந்தகுமார் மகன் லோகுராம் ஆறாம் வகுப்பும், மகள் அக்சயா நான்காம் வகுப்பும் படித்துள்ளனர். மண்ணில் புதைந்து கிடந்த உடல்களை வெளியே எடுக்கும்போது, பாடப்புத்தகங்கள் சிதறி கிடந்தன.புது வீட்டிற்கு குடிபோக இருந்தவர் பலிமேட்டுப்பாளையம் அடுத்த ஆலாங்கொம்பை சேர்ந்தவர் குருசாமி, 45, இவர் ஆலாங்கொம்பில் புதிய வீடு கட்டி இரு தினம் முன் கிரஹப்பிரவேசம் செய்துள்ளார். 'புதிய வீட்டுக்கு குடிபெயர்ந்து செல்கிறோம்' என்ற தகவலை இவர், மேட்டுப்பாளையம் நடூரில் உள்ள உறவினர் சிவகாமியிடம் சொல்ல வந்தார். இரவு நேரம் ஆனதால், சிவகாமி வீட்டிலேயே படுத்துக் கொண்டார். காம்பவுண்ட் சுவர் இடிந்து வீட்டின் மீது விழுந்ததில் இறந்த 17 பேரில் குருசாமியும் ஒருவர். மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வந்திருந்த குருசாமியின் உறவினர்கள், 'புது வீடு கட்டியும் குடியிருக்க முடியாமல் போயிட்டியே' என, கதறி அழுதனர்.7 மணி நேரம் மீட்பு பணிதீயணைப்பு துறையினர் நிலைய அதிகாரி பாலகிருஷ்ணன் தலைமையில், மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த அனைவரும் இறந்தது தெரியவந்தது. காலை, 10:30 மணிக்குள், 17 பேரின் உடல்களை மீட்டு வெளியே எடுத்தனர். இடிபாடுகளில் இன்னும் சிக்கி உள்ளனரா என, அன்னுார், கோவை தீயணைப்பு துறையினர், பொது மக்கள், பொக்லைன் உதவியுடன், தோண்டிப் பார்த்தனர். வேறு யாரும் இல்லை என, உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, 7 மணி நேரமாக நடந்த மீட்பு பணி முடிவுக்கு வந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X