சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜவுளிக்கடை உரிமையாளர் மீது போலீஸ் வழக்கு

Added : டிச 03, 2019
Advertisement

மேட்டுப்பாளையம்:காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில், 17 இறந்த சம்பவம் தொடர்பாக விசாரித்த போலீசார், ஜவுளிக்கடை உரிமையாளர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர்.கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நடூர் கண்ணப்பன் லே அவுட் மேல்பகுதியில், சக்கரவர்த்தி துகில் மாளிகை ஜவுளிக்கடை உரிமையாளர் குட்டி என்கிற சிவசுப்ரமணியத்துக்கு, 66, சொந்தமான வீடும், பெரிய காம்பவுண்ட் சுவரும் உள்ளன. இந்த காம்பவுண்ட் சுவர், நேற்று முன் தினம் இரவு பெய்த மழைக்கு, இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி, 17 பேர் பலியாகினர்.மேட்டுப்பாளையம் வி.ஏ.ஓ., கார்த்திகேயன், போலீசில் புகார் செய்தார். விசாரித்த போலீசார், ஜவுளிக்கடை உரிமையாளர் சிவசுப்ரமணியம் மீது, இ.பி.கோ., 304 எ (விபத்து ஏற்படுத்துதல்), 4 ஆப் டி.என்.பி.பி.டி.எல்., சட்டப்பிரிவு (பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துதல்) ஆகிய இரு பிரிவின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.மேட்டுப்பாளையத்தில்180 மி.மீ., மழை பதிவுேகாவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் நேற்று முன் தினம் நள்ளிரவு, 1:00 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. விடியற்காலை, 4:00 மணிக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இடைவிடாமல் மழை கொட்டித்தீர்த்தது. நேற்று காலை, 8:00 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், மேட்டுப்பாளையத்தில், 180.3 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இது, இந்தாண்டில் மேட்டுப்பாளையத்தில் பெய்த அதிகபட்ச மழையாகும்.மழை காரணமாக, மேட்டுப்பாளையம் சாந்தி நகர், சேரன் நகர் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. மோத்தேபாளையத்தில் சிறுமுகை சாலையில் வெள்ளம் சென்றதால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. ராமேகவுண்டன்புதுாருக்குச் செல்லும் வழியில் உள்ள பாலத்திலும் தண்ணீர் அதிகமாக சென்றதால், அவ்வழியிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பவானி ஆற்றிலும் ஒரு மணி நேரம் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X