பொது செய்தி

தமிழ்நாடு

எல்லாமே சிறிது காலம்தான்... காட்சிப்பொருளான 'சிக்னல்'கள்

Updated : டிச 03, 2019 | Added : டிச 03, 2019
Advertisement
 எல்லாமே சிறிது காலம்தான்...  காட்சிப்பொருளான 'சிக்னல்'கள்

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டையில் போக்குவரத்தை ஒழுங்கப்படுத்த நகரில் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிக்னல்கள் காட்சி பொருளாக இருப்பதால் தினமும் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது.

குறுகலான ரோடுகளை கொண்டது அருப்புக்கோட்டை . மதுரை ரோடு, நாடார் சிவன் கோயில் சந்திப்பு, முருகன் கோயில், அண்ணாசிலை உள்ளிட்டவை போக்குவரத்துங அதிகம் உள்ள பகுதிகளாகும். தினமும், ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட கனரக வாகனங்கள், டூ வீலர்கள் வந்து செல்லும். நடை பாதை கடைகளின் ஆக்கிரமிப்பு, கண்ட இடங்களில் நிற்கும் இருசக்கர வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த முக்கிய சந்திப்புகளில் சிக்னல்கள் ஏற்படுத்தப்பட்டன.இது சில மாதங்களிலே இதன் விளக்குகள் கழற்றப்பட்டு காட்சி பொருளாக நிற்கிறது. காலை மாலை வேளைகளில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இருக்கிற டிராபிக் போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. சிக்னல்கள் விளக்குகள் இருந்தாலாதவது வாகனங்கள் ஓரளவிற்கு ஒழுங்காக நின்று செல்லும். எச்சரிக்கை விளக்குகள் இல்லாததால் கண்டபடி வாகனங்கள் சென்று போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றன. போக்குவரத்து போலீஸ் பிரிவு இருந்தும் எந்தவித பயனும் இல்லை. தினம் தினம் மக்கள்தான் அல்லல்படுகின்றனர்.இதை தவிர்க்க முக்கிய சந்திப்புகளில் உள்ள சிக்னல்களில் விளக்குகளை பொருத்தி வாகனங்களை முறையாக செல்ல போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதோடு ரோட்டோர ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும். பஜார் பகுதிளில் கண்ட இடங்களில் வாகனங்கள் நிற்பதற்கும் தடை விதிக்க வேண்டும்.
எரிந்தாலே போதும்
அருப்புக்கோட்டையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை மற்றும் மாலை வேளைகளில் அதிக அளவு உள்ளது. முக்கிய சந்திப்புகளில் சிக்னல் லைட்டுகள் எரிய செய்தால் போலீசார் இல்லாத நேரத்திலும் அவற்றை பார்த்து மக்கள் முறையாக செல்வர்.--சோலையப்பன், சமூக ஆர்வலர் , அருப்புக்கோட்டை.
யுக்திகளை கையாளுங்க
குறுகிய ரோடுகளாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது.இதை தவிர்க்க நவீன யுக்திகளை கையாள போக்குவரத்து போலீசார் முன் வர வேண்டும். சிக்னல் லைட்டுகள், சந்திப்புகளில் சிசிடிவி கேமிராக்களை பொருத்தி போக்குவரத்தை சரி செய்யலாம்.-- மோகன்வேல், தனியார் ஊழியர் ,அருப்புகோட்டை.

தீர்வு

நகரில் முக்கிய சந்திப்புகளில் காட்சி பொருாளாக உள்ள சிக்னல்களை செயல்படுத்தி காலை, மாலை நேரங்களில் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் கூடுதல் போக்குவரத்து போலீசாரை ஈடுபடுத்த வேண்டும். ரோட்டோர ஆக்கிரமிப்பு கடைகளும் நெரிசலுக்கு முக்கிய காரணமாகின்றன. இதையும் முறையாக அகற்ற வேண்டும். கண்டப்படி நிறுத்தப்படும் டூவீலர்களை முறைப்படுத்த பொதுமக்களிடம் அறிவுறுத்த வேண்டும். இதோடு கண்காணிப்பு கேமராக்களையும் பொறுத்தி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தலாம்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X