சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நீலகிரியில் 14 இடங்களில் மண் சரிவு! குன்னூர் சாலை மூடல்; மீட்பு படை உஷார் நிலை

Added : டிச 03, 2019
Advertisement
 நீலகிரியில் 14 இடங்களில் மண் சரிவு! குன்னூர் சாலை மூடல்; மீட்பு படை உஷார் நிலை

குன்னுார்:குன்னுார்--மேட்டுப்பாளையம் சாலையில், 12 இடங்களில் நேற்று மண்சரிவு ஏற்பட்டதால், பயணிகளின் பாதுகாப்பு கருதி சாலை மூடப்பட்டது. வாகனங்கள் கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.நீலகிரி மாவட்டத்தில், கடந்த இரு நாட்களாக கனமழை பெய்கிறது. நேற்று மாலை நிலவரப்படி, மாவட்டத்தில், 528.40 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக, குன்னுாரில், 106 மி.மீ., மழை பெய்துள்ளது.நேற்று அதிகாலை, 5:00 முதல், 7:00 மணிவரை மட்டும், 20 மி.மீ., மழை பெய்ததால், குன்னுார்-மேட்டுப்பாளையம் சாலையில், லாஸ்பால்ஸ், காட்டேரி பூங்கா, மரப்பாலம், கே.என்.ஆர்., மற்றும் குரும்பாடி உட்பட, 14 இடங்களில் பெரியளவிலான மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.மேட்டுப்பாளையத்தில் இருந்து, கோவை மற்றும் குன்னுாருக்கு வந்த அரசு பஸ்கள் உட்பட, அனைத்து வாகனங்களும் நடுவழியிலேயே நிறுத்தப்பட்டு கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டன. இச்சாலையில் மரப்பாலம் அருகே, ஆரோக்கிய அன்னை கெபி பகுதியளவு சேதமடைந்தது.கொட்டும் மழையிலும் தீயணைப்பு, நெடுஞ்சாலை மற்றும் காவல்துறையினருடன், மாநில பேரிடர் மீட்பு குழுவினர் சாலை சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். நீலகிரி எஸ்.பி., சசிமோகன் மீட்பு பணியை துரிதப்படுத்தினார். கடந்த, 16ம் தேதி பெய்த கனமழையில், குன்னுார், கிருஷ்ணாபுரம் பகுதியில் வாகனங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் நேற்று காலை பெய்த கனமழையின் போது, இந்த ஆற்றின் பாலத்தின் மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.தயார் நிலையில் 256 முகாம்கள்நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், ''நீலகிரியில், 256 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் பாதிப்பு ஏற்படுவதாக அறிந்தால் முகாம்களுக்கு செல்ல வேண்டும். அனைத்து வாகன போக்குவரத்தும் கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மாநில பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். மழை தொடர்ந்து நீடிக்குமானால், குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலையில் இரவு நேர வாகனப் போக்குவரத்து தடை செய்யப்படும்,'' என்றார்.மண்ணில் புதைந்த பெண்கள் மீட்பு!குன்னுார், டென்ட்ஹில் பகுதியில் வீட்டின் மேல் மண் சரிந்தது. சமையல் செய்து கொண்டிருந்த ரேவதி, 26, இடிபாடுகளில் சிக்கினார். தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் தலைமையிலான ஊழியர்கள் அவரை மீட்டனர். மண்ணில் புதைந்து, கசிந்து கொண்டிருந்த சமையல் காஸ் சிலிண்டரையும் நீண்ட நேர போராட்டத்திற்கு வெளியே எடுத்தனர்.இதேபோன்று வண்ணாரப்பேட்டை சாலையில் மண் சரிந்து, ஜூலியட், 54, என்பவர் சிக்கினார். அவரும் பத்திரமாக மீட்கப்பட்டார். குன்னூர் ரயில் ஸ்டேஷன் அருகில் எம்.ஜி.ஆர்., நகர் ஆற்றோர குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்தது. அங்கிருந்த நான்கு குழந்தைகள், இரண்டு கர்ப்பிணிகள் உட்பட, 40 பேர் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X