பொது செய்தி

தமிழ்நாடு

கண்மாய்களுக்கு நீர்வரத்து மகிழ்ச்சியில் விவசாயிகள்

Added : டிச 03, 2019
Advertisement

ஸ்ரீவில்லிபுத்துார்:பிளவக்கல் அணை திறப்பால் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய கண்மாய்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்தமழையால், பிளவக்கல் அணை நிரம்பி பாசனத்திற்காக திறந்து விடபட்டது. அணை திறப்பிற்கு முன்பே கூமாபட்டி பகுதி கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து இருந்தது.அணைதிறக்கபட்டபின் கூமாபட்டி கண்மாய்கள் நிரம்பி வத்திராயிருப்பு, சுந்தரபாண்டியம் கண்மாய்கள் நிரம்பியுள்ளது. தற்போது சுந்தரபாண்டியத்தை கடந்து குன்னுார் மற்றும் நத்தம்பட்டி கண்மாய்க்கும் நீர்வரத்து செல்கிறது. இதனால் வத்திராயிருப்பு ஒன்றிய விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கண்மாய்களில் தண்ணீர் தேங்கியிருப்பதால் போர்வெல்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் இதுவரை 45 நிமிடங்களில் கிடைக்கும் தண்ணீர் தற்போது 20 நிமிடங்களிலேயே கிடைப்பதாக இல்லத்தரசிகள் கூறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X