விக்ரம் லேண்டரை மதுரை பொறியாளர் உதவியுடன் கண்டுபிடித்த நாசா

Updated : டிச 03, 2019 | Added : டிச 03, 2019 | கருத்துகள் (26)
Advertisement
விக்ரம் லேண்டர், சந்திரயான்-2,நாசா

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: நிலவில் விழுந்து நொறுங்கிய விக்ரம் லேண்டரை, மதுரையை சேர்ந்த பொறியாளர் உதவியுடன் நாசா கண்டுபிடித்துள்ளது.

நிலவின் தென் முனையை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை நிலவில் தரையிறக்கும் பணி செப்.,7 ம் தேதி நடந்தது. அப்போது தரையிறங்குவதற்கு 400 மீட்டர் தூரத்தில், பூமியுடனான கட்டுப்பாட்டை விக்ரம் லேண்டர் இழந்தது. தரையிறங்க நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் லேண்டர் இருப்பது, ஆர்பிட்டார் மூலம் கண்டறியப்பட்டது.




இதனால் தொடர்ந்து விக்ரம் லேண்டரிடம் இருந்து தொடர்பை பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சித்து வந்தனர். அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவும், இஸ்ரோவுக்கு உதவியாக விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முயற்சித்தது. இந்நிலையில் விக்ரம் -2 லேண்டரின் உடைந்த பாகங்கள் நிலவின் மேற்பரப்பில் இருப்பது கண்டறிப்பட்டதாக நாசா தனது டுவிட்டர் பக்கத்தில் படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது.


மதுரை பொறியாளர் உதவி


நிலவில் விழுந்து நொறுங்கிய விக்ரம் லேண்டரின் கண்டறிய நாசாவுக்கு மதுரையை சேர்ந்த பொறியாளர்சண்முக சுப்பிரமணியன் என்பவர் உதவி செய்தது தெரியவந்துள்ளது. சென்னை தரமணியில்உள்ள கணினி நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வரும் அவர், நாசாவின் செயற்கைக்கோள் எடுத்த நிலவின் புகைப்படங்களை தொடர்ந்து ஆய்வு செய்தார். செப்., 17, அக் 14, 15 மற்றும் நவ.,1 ல் நாசா வெளியிட்ட புகைப்படங்களை ஆய்வு செய்து லேண்டரை கண்டுபிடித்து, நாசாவுக்கு இமெயில் செய்துள்ளார். இந்த இமெயிலை ஆய்வு செய்து நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்ததுடன் அதற்காக நன்றி தெரிவித்தனர்.

இது தொடர்பாக நாசா வெளியிட்ட அறிக்கையில், லேண்டர் விழுந்து நொறுங்கிய இடத்தில் இருந்து 750 மீ., தொலைவில், லேண்டர் பாகங்கள் கிடந்ததை சண்முக சுப்ரமணியன் கண்டுபிடித்தார் எனக்கூறியுள்ளது.

லேண்டர் பாகங்களை கண்டுபிடித்த சுப்ரமணியன், தனது டுவிட்டர் பக்கத்தில், '' இது தான் விக்ரம் லேண்டரா? லேண்டர், லூனார் மணலில் புதைந்திருக்கலாம்'' என நாசாவின் டுவிட்டர் பக்கத்தை மேற்கொள்காட்டி பதிவிட்டார்.




சண்முக சுப்ரமணியன் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: நிலவின் இரண்டு புகைப்படங்களையும் எனது இரண்டு லேப்டாப்களில் வைத்து மாறி மாறி ஆய்வு செய்தேன். இதில், ஒன்று பழைய புகைப்படம் என்பதும், மற்றொன்று புகைப்படம் என்பதும் தெரியவந்தது. இதனைகண்டுபிடிக்க கடினமானதாக இருந்தாலும், இதற்காக கடுமையாக உழைத்தேன். விக்ரம் லேண்டர் சென்ற பாதையை கண்டுபிடிக்க கடினமாக முயற்சி செய்தேன். நாசா அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் பின்னால் கடுமையான உழைப்பு இருந்தது. விண்வெளி அறிவியல் மீது எனக்கு எப்போதும் ஆர்வம் இருந்தது. எந்தவொரு வாய்ப்பையும் நான் தவற விடவில்லை. எனக்கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
04-டிச-201907:04:06 IST Report Abuse
spr "நாசா வெளியிட்ட அறிக்கையில், லேண்டர் விழுந்து நொறுங்கிய இடத்தில் இருந்து 750 மீ., தொலைவில், லேண்டர் பாகங்கள் கிடந்ததை சண்முக சுப்ரமணியன் கண்டுபிடித்தார் எனக்கூறியுள்ளது." பாராட்டுகள் ஆனால் பல கோடி செலவில் இயங்கும் நமது அரசு அமைப்புக்கள் இது போன்ற முயற்சிகளை ஏன் மேற்கொள்ளவில்லை சந்திரனுக்கு ஆள் அனுப்புவோம் எனும் நம் விஞ்ஞானிகள் ஆழ்துளைக் குழாயில் விழுந்த குழந்தையைக் கூட மீட்க ஒரு அமைப்பைக் கண்டுபிடிக்க முடியவில்லையே இவர் செய்த செயலைப் பாராட்டிய நாசாவையும் பாராட்டுவோம் நம் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து மட்டுமே சொல்லிக்கொள்வார்கள் நபரை அடையாளம் காட்ட மாட்டார்கள்
Rate this:
Share this comment
Cancel
03-டிச-201914:56:26 IST Report Abuse
ஸாயிப்ரியா விக்ரம் லாண்டர் Get up சிக்னல் குடுங்க.
Rate this:
Share this comment
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
03-டிச-201914:36:59 IST Report Abuse
Tamilan இதை இஸ்ரோ பிடித்த படத்தில் கண்டுபிடிக்கமுடியவில்லையா அல்லது போனதை கண்டுபிடித்து என்ன பிரயோஜனம் என்று விட்டு விட்டார்களா ?. அல்லது கண்டுபிடித்துவிட்டு வெளியில் சொல்லாமல் விட்டுவிட்டார்களா ?. ஒருமுறை கண்டுபிடித்துவிட்டதாக கூறினார்கள் . ஆனால் படத்தை வெளியிடவில்லை . நாசாவே, பிடித்த படத்தை தாங்கள் ஆராயாமல் , பொது மக்களிடம் கொடுத்து விட்டார்கள் . நாசாவைப்போல் இஸ்ரோ பொதுமக்களிடம் தாரை வார்க்காதது ஏன் ? கஷ்டப்பட்டு உழைத்தவனுக்குத்தான் அதன் மதிப்பு தெரியும் என்று இருந்துவிட்டார்களா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X