பொது செய்தி

தமிழ்நாடு

அறிவிப்பு வந்தும் வராத பொங்கல் 'பரிசு'

Added : டிச 03, 2019
Advertisement


விருதுநகர்:ரூ.1,000 அடங்கிய பொங்கல் பரிசு திட்டத்தை அரசு அறிவித்தும் விருதுநகர் மாவட்டத்தில் இன்னும் வழங்கப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
அரசின் சார்பில் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பண்டிகைக்காக ரூ.ஆயிரம், கரும்பு, சர்க்கரை, அரிசி, முந்திரி, திராட்சை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் அவற்றை வழங்க எந்த தடையும் இருக்காது எனவும் கூறப்பட்டிருந்தது. நவ. 29ல் சென்னையில் முதல்வர் பழனிசாமி பொங்கல் பரிசு திட்டத்தை துவக்கி வைத்தார்.இதன் தொடர்ச்சியாக பொங்கல் பரிசு திட்டம் வழங்கப்படும் என அறிவித்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் தற்போது வரை வழங்கவில்லை.மக்களும் கடைகளுக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். வெறுமனே அரசாணை மட்டுமே வந்துள்ளது .இதற்கான பணம்,பொருட்கள் வந்து சேரவில்லை என்கின்றனர் ரேஷன்கடை ஊழியர்கள் . தேர்தல் அறிவிப்பு வேறு வந்துவிட்டதால் கிடைக்குமா கிடைக்காதா என்ற ஏக்கத்தில் உள்ளனர் மக்கள்.மாவட்ட வழங்கல் அலுவலர் வசந்தராஜன் கூறுகையில்,'' அரசாணை வந்து விட்டது. விரைவில் பரிசு திட்டம் வழங்கப்படும், ''என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X