பயிர்காப்பீடுக்கு அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பயிர்காப்பீடுக்கு அழைப்பு

Added : டிச 03, 2019

ராஜபாளையம்:ராஜபாளையம் வேளாண் உதவி இயக்குனர் சுப்பையா செய்தி குறிப்பு: ராஜபாளையம் வட்டாரத்தில் 1,700எக்டேர் மக்காச்சோளம், 850 எக்டேர் பருத்தி, 150 எக்டேர் உளுந்து, 100 எக்டேர் பாசி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்புமகசூலுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய ஏக்கருக்கு மக்காச்சோளத்திற்கு ரூ 355.50, பருத்திக்கு ரூ1135 , உளுந்து மற்றும் பாசிக்கு ரூ 236.25 பிரிமிய தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்டா, அடங்கல், வங்கி பாஸ் புக் நகல்களுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தேசிய வங்கிகள் மற்றும் இ சேவை மையங்களில் பதிவு செய்யலாம். கடைசி நாள் டிச. 20 -என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X