விருதுநகர்;விருதுநகர், அருப்புக்கோட்டையில் அரசு பஸ் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். நேற்று இரவு 8:30 மணிக்கு விருதுநகரில் இருந்து காரியாபட்டி சென்று கொண்டிருந்த பஸ் விருதுநகர் ராமமூர்த்தி பாலத்தில் ஏறும் போது மர்ம நபர்கள் கல்வீசினர். இதே போன்று அருப்புக்கோட்டையில் இருந்து பூலாங்கால் சென்று கொண்டிருந்த பஸ், கல்லுாரணி அருகே வந்து கொண்டிருந்த போது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். போலீசார் கூறுகையில், 'கோவை மேட்டுப்பாளையத்தில் தமிழ்ப்புலிகள் நிறுவனர் நாகை திருவள்ளுவன் கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக கல்வீச்சு தாக்குதல் நடந்துள்ளது,' என்றனர்.