விருதுநகர், அருப்புக்கோட்டையில் அரசு பஸ்கள் மீது கல்வீச்சு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விருதுநகர், அருப்புக்கோட்டையில் அரசு பஸ்கள் மீது கல்வீச்சு

Added : டிச 03, 2019
 விருதுநகர், அருப்புக்கோட்டையில்  அரசு பஸ்கள் மீது கல்வீச்சு

விருதுநகர்;விருதுநகர், அருப்புக்கோட்டையில் அரசு பஸ் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். நேற்று இரவு 8:30 மணிக்கு விருதுநகரில் இருந்து காரியாபட்டி சென்று கொண்டிருந்த பஸ் விருதுநகர் ராமமூர்த்தி பாலத்தில் ஏறும் போது மர்ம நபர்கள் கல்வீசினர். இதே போன்று அருப்புக்கோட்டையில் இருந்து பூலாங்கால் சென்று கொண்டிருந்த பஸ், கல்லுாரணி அருகே வந்து கொண்டிருந்த போது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். போலீசார் கூறுகையில், 'கோவை மேட்டுப்பாளையத்தில் தமிழ்ப்புலிகள் நிறுவனர் நாகை திருவள்ளுவன் கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக கல்வீச்சு தாக்குதல் நடந்துள்ளது,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X