பொது செய்தி

இந்தியா

'ஏர் - இந்தியா' விமானத்தில் வந்த ஸ்வீடன் அரச குடும்பத்தினர்

Updated : டிச 03, 2019 | Added : டிச 03, 2019 | கருத்துகள் (13)
Advertisement
'ஏர் - இந்தியா' விமானம்,  ஸ்வீடன் அரச குடுமபம்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: ஸ்வீடன் அரசரும், அவரது மனைவியும், இந்தியாவுக்கு வருவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு விமானத்தில், திடீர் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, 'ஏர் - இந்தியா' பயணியர் விமானத்தில், அவர்கள் டில்லி வந்தனர்.ஐரோப்பிய நாடான ஸ்வீடனின் அரச குடும்பத்தினர், 26 ஆண்டுகளுக்கு முன், நம் நாட்டிற்கு வந்திருந்தனர். இதற்கு பின், தற்போது தான், ஐந்து நாள் பயணமாக, ஸ்வீடன் அரசர் கார்ல் கட்சப், அவரது மனைவியும், அரசியுமான சில்வியா ஆகியோர், நம் நாட்டுக்கு வந்துள்ளனர்.


கோளாறுமுன்னதாக, ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரிலிருந்து, இவர்கள் வருவதற்காக, அந்த நாட்டின் சார்பில், சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், புறப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன், அந்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, அரசரும், அவரது குடும்பத்தினரும், ஸ்டாக்ஹோமிலிருந்து, டில்லிக்கு நேரடியாக வரும், ஏர் - இந்தியா பயணியர் விமானத்தில், சக பயணியருடன் சேர்ந்து வந்தனர். இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்து, ஏர் - இந்தியா உயர் அதிகாரி சங்கீதா, சமூக வலைதளத்தில் கூறுகையில், 'ஏர் - இந்தியா விமானத்துக்கு சிறப்பு விருந்தினராக வந்த, ஸ்வீடன் அரசரையும், அரசியையும் வரவேற்பதில், எங்கள் நிறுவனம் பெருமை அடைகிறது' என்றார்.


வரவேற்பு


டில்லி விமான நிலையத்தில், ஸ்வீடன் அரச குடும்பத்தினரை, மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் பபுல் சுப்ரியோ வரவேற்றார். அவர்களுக்கு, நம் நாட்டு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோரையும், அரச குடும்பத்தினர் சந்தித்து பேசினர். ஸ்வீடன் அரசரும், அவரது மனைவியும், தங்கள் ஐந்து நாள் பயணத்தின் போது, மஹாராஷ்டிரா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களுக்கும் செல்லவுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dandy - vienna,ஆஸ்திரியா
03-டிச-201917:22:35 IST Report Abuse
dandy ஐரோப்பிய அரச குடும்பங்கள் மிகவும் எளிமையானவர்கள்.....பொது மக்களுடன் பழகுபவர்கள் ..சில ஆண்டுகளுக்கு முன்னர் கணவரின் ஒரு ஊழல் வழக்கு சம்பந்தமாக ஸ்பானிய இளவரசி நீதி மன்ற ஆணை வந்ததும் குறித்த நாளில் நீதிமன்ற விசாரணை கூட்டில் ஏறினார் ..ஹி ஹி ஹி இந்தியாவில் முன் ஜாமீன் ( செம்மொழி ) பின் ஜாமீன் ( செம்மொழி ) எல்லாம் செட்டியார் ..கட்டுமரம் மாதிரி கேட்டு நாளை போடுவார்கள் ..என்னே இந்திய நீதி ????
Rate this:
Share this comment
Cancel
Karthik - Doha,கத்தார்
03-டிச-201916:22:35 IST Report Abuse
Karthik அவர்கள் (அயல் நாட்டினர்) நேரத்தை வீணடிப்பவர்கள் அல்லர். கடமையை (இந்தியா செல்லும்) செவ்வனே செய்து முடித்துள்ளனர், காரணமின்றி. ஆனால், நம்மூர் அரசியல் வியாதிகள், ஒரு விழாவிற்கு 15 வாகனங்கள் பின் தொடரச் செல்வார்கள். எரிபொருள் மற்றும் நேரம் விரயமாவதைக் கண்டுகொள்ள மாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
03-டிச-201910:02:16 IST Report Abuse
Lion Drsekar அவர்கள் மனிதர்கள், இங்கு தேர்தல் முடிந்தவுடன் மக்களை பற்றி சிந்திக்கவே விரும்பமாட்டார்கள், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இரு கரம் கூப்பி வீட்டு வாசலுக்கே வருவார்கள் நாம் அதை நிஜம் என்று நினைத்து 70 ஆண்டுகளாக .... வந்து கொண்டு இருக்கிறோம், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X