சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருவாடானை, தொண்டியில் 11 வீடுகள் சேதம்

Added : டிச 03, 2019
Advertisement

திருவாடானை:திருவாடானை பாரதி நகரை சேர்ந்தவர் சொர்ணம். இவரது வீட்டருகே உள்ள கிணறு திடிரென பூமிக்குள் புதைந்ததால் பெரிய பள்ளம் ஏற்பட்டது.

திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர் செங்கோல்ராஜ் தலைமையில் சென்ற வீரர்கள் மணலால் பள்ளத்தை மூடி சரி செய்தனர். தொண்டி அருகே புதுபட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் முகமதுகோயா. இவரது வீட்டை சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்ததால் வெளியே வர முடியாமல் சிரமப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் சென்று தண்ணீரை வாய்க்கால் மூலம் வெளியேற்றி சரி செய்தனர்.கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையில் திருவடிமதியூர் ரெத்தினம், சூச்சனி சாத்தையா, முகிழ்த்தகம் சந்தியாகு, லுாகாஸ், கெங்கைவிலாசம் அருள், பேச்சிமுத்து, என்.மங்கலம் சாத்தான், அடுத்தகுடி காந்தி, மாஞ்சூர் துரைராஜ் ஆகியோரின் ஓட்டு வீடுகள் சேதமடைந்தது. பாதிக்கபட்ட வீடுகளை திருவாடானை தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் பார்வையிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X