திருவாடானை:தொண்டி மகா சக்திபுரத்தில் இந்திய கப்பல் படை சார்பில் மீனவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. தொண்டி, நம்புதாளை, சோலியக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கலந்து கொண்டனர். மீனவர்கள் கடலுக்குள் செல்லும் போது உயிர் காக்கும் உபகரணங்களை அவசியம் கொண்டு செல்ல வேண்டும். பலத்த காற்றில் படகு கவிழும் போது டீசல் கேன் இருந்தால் கூட அதை பிடித்துக் கொண்டு மிதந்து தப்பிக்கலாம்எனவே மீனவர்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம், என்று கப்பல்படை அதிகாரிகள் பேசினர். தொண்டி மரைன் எஸ்.ஐ.,மாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.