பொது செய்தி

தமிழ்நாடு

சீமைக்கருவேல மரங்களை அழித்த மக்களின் முயற்சியால் நிறைந்தது கண்மாய்

Added : டிச 03, 2019
Advertisement
 சீமைக்கருவேல மரங்களை அழித்த மக்களின் முயற்சியால் நிறைந்தது கண்மாய்

கடலாடி:கடலாடி அருகே கூராங்கோட்டை கிராமத்தில் பத்து ஆண்டுகளாக சீமைக்கருவேல மரங்களின் ஆக்கிரப்பில்இருந்த கூராங்கோட்டை கண்மாயில்பருவ மழை காலங்களில் நீர் சேமிப்பதில் பெரும் சிக்கல் நிலவியது.
30 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்மாயில் கோடை காலத்தில் குடிநீருக்காகபெரிய ஊற்று தோண்டி பயன்படுத்தினர். இங்கு அகற்றப்படாத சீமைக்கருவேல மரங்களால்,நீர் சேமிப்பில் சிக்கல் ஏற்பட்டது.இதையடுத்து கிராம மக்கள் ஒன்று கூடி கண்மாயை சுற்றி வளர்ந்திருந்தசீமைக்கருவேல மரங்களை அகற்றிகுடிமராமத்து பணிகள் செய்து சீரமைத்தனர்.முன்னாள் ஊராட்சி தலைவர் செந்துார் பாண்டியன் கூறுகையில், கிராம மக்களின் முயற்சியால்சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டுகண்மாய் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும்.விவசாய நிலங்களில் செல்லும் சிறிய ஓடைகளை கண்டறிந்து3 தடுப்பணைகளை அமைத்தால்,கோடையிலும் வற்றாமல் தண்ணீர் இருக்கும்.மூக்கையூர் கடலில் மழைநீர் வீணாவது பெருமளவு தடுக்கப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X