பொது செய்தி

தமிழ்நாடு

சேதமடைந்த கட்டடத்தில் வகுப்பு மாணவர்கள் அச்சம்

Added : டிச 03, 2019
Advertisement
 சேதமடைந்த கட்டடத்தில் வகுப்பு மாணவர்கள் அச்சம்

கமுதி:கமுதி - சாயல்குடி ரோட்டில் கோவிலாங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 420 மாணவர்கள் படிக்கின்றனர்.

பள்ளியில் கழிப்பறை, மைதானம், வகுப்பறை வசதிகள் இல்லை. இருக்கும் வகுப்பறை கட்டடங்கள், சிமென்ட் சீட்டுகளால் ஆன மேற்கூரைகள் சேதமடைந்து ஓட்டை விழுந்துள்ளது. மழை காலங்களில் வகுப்புகளில் மழைநீர் விழுவதால் வகுப்புகள் நடத்த முடியாத நிலைக்கு ஆசிரியர்கள் ஆளாகியுள்ளனர்.வகுப்பறை கட்டடங்கள் இல்லாததால், மழை நீர் தேங்கிய மைதானத்தில் மரத்தடி நிழலில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடக்கிறது. குடிநீர், சுற்றுச்சுவர் வசதியில்லாதால், பள்ளி வளாகம் இரவு நேரங்களில் மது பாராக மாறி, வகுப்பறைகளில் காலி மதுபாட்டில்கள் குவியலாக கிடக்கிறது. பள்ளி வளாகத்தில் 8 கட்டடங்களுக்கு மேல் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், மாணவர்களின் எண்ணிக்கை 5 ஆண்டுகளாக கணிசமாக குறைந்துள்ளது.இதனால் சேதமடைந்த வகுப்பறை கட்டடங்களை அகற்றி, கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், பேவர் பிளாக் தளம், சுற்றுச்சுவர் அமைத்து, மைதானத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X